Wednesday, December 23, 2009
காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!
நான் நடக்க உன் கைகளை நீட்டினாய் நீ
- காதலை கண்களில் தேக்கி
உற்சாகத்தோடு உன் விரல் பிடித்து நடந்தேன் நான்
- நட்பின் புன்னகை ஏந்தி
என் கண்களில் கண்ணீர் கண்டு துடைக்க விழைந்தாய் நீ
- காதலின் பரிதவிப்போடு
ஆதரவாய் உன் தோள் சாய்ந்து விசும்பினேன் நான்
-நட்பின் ஆறுதலோடு
வலியின் சாயலாம் சோகத்தை நெஞ்சில் தேக்கி நீ என்னை பார்க்க
- காதலின் கலவரத்தோடு
உன்னை என் மடியில் சாய்த்து தலை கோதினேன் நான்
- நட்பின் அரவணைப்போடு
நட்பின் விளிம்பை தாண்டிய நான் உன்னை தேடுகிறேன் என்றேன் !!!! நீயோ என் இமைகளை மூடச்செய்து நீல கடலின் ஆழத்தில் என்னை நிறுத்தி உன் நினைவு மழையினால் என்னை நினையச்செய்தாய் !!!
உன் கண்ணீர் முத்துக்களினால் முத்தாரம் சூட்டினாய் !!!!
நீ எங்கே என தேடி அலைந்து என் முன்னே வா என்றேன்
- காதலின் வலியோடு
காற்றிலே கலந்த நான் உன் சுவாசமாக இருக்கிறேன் என்றாய்
- காதலின் வெற்றி புன்சிரிப்போடு
நெருங்கும் போது விலகும் காதல்.... விலகும் போது நெருங்குவதேன் !!!
விழியில் நீரை நிறைத்து நான் தேடும் போது ..........
உன்னை மறைப்பதும் ஏன் ?????
Tuesday, December 22, 2009
நான் வருத்தமா இருக்கேன்
Monday, December 21, 2009
இது ஒரு கவிதையான விடுகதையின் கதை - விடை இங்கே !!!
கேளுங்கள் .............
முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
என்று புதிர் போட்டார் !!!!!
மருத்துவர் சிறிது சிந்தனைக்கு பின் சுற்றி உள்ளோரை ஒருமுறை பார்த்து சிரித்தார் ..... அவர்களோ ஒரு பெரிய கேள்வி குறியை முகத்தில் தேக்கி மருத்துவரை ஆவலோடு நோக்கினர் !!!!! சிறிது நகைப்புக்கு பின் மருத்துவர் புலவரை நோக்கி முறுவல் மாறாமல் !!!
ஆம் ஐயா தாங்க முடியா உயிர் கொல்லும் வலிதான் !!! கேளுங்கள் மருந்தை
பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்
என்றுரைத்து பெரிதாக நகைத்தார் !!!! புலவரின் முகத்திலோ ஈ ஆடவில்லை !!! மருத்துவரை வணங்கி பணிவாக அவ்விடத்தை விட்டு அகன்றார் !!!! அவர் செருக்கும் ஆணவமும் அவரை விட்டு அச்ச்சனமே அகன்றது !!!!
இப்போ நீங்க எனக்கு இவ்விரு பாடல்களின் அர்த்தத்தை சொல்ல வேண்டும் !!!!
இது எனக்கு என் தத்தா சொன்ன கதை !!!! உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் !!!!!!!!!!!!!
முக்காலை கையில் ஏந்தி
அஞ்சுதலை நாகம் கொதிற்று
இரண்டு கால்கள் மற்றும் கைதடி சேர்ந்து மூன்று கால்கள்
மூவிரண்டு ( 6 வழி பாதை ) நடந்து போகும் போது
அக்காலின் கீழ் காலில் - அடி பாதத்தில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று - 5 தலை கொண்ட நெறிஞ்சி முள் குத்தியது
பத்துரதன் புத்திரனின்
பத்துரதன் - தசரதன்
தரையில் தேய்க்க வேண்டும் என்பது பொருள்
Wednesday, December 16, 2009
டிஆரின் கவிதைகள்
டிஆரின் கவிதைகள்
பல கேலிகளும் கிண்டல்களும் இருந்தாலும் நாம் ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம் டிஆரின் இசையும் பாடல் வரிகளும்........அவர் எழுதி இசை அமைத்த சில பாடல் வரிகள் மிக அற்புதமானவை...........என் மனம் கவர்ந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் தங்களின் மேன்மையான கருத்துகளையும் எதிர்நோக்குகிறேன்
படம் : மைதிலி என்னை காதலி
பாடல் : ஒரு பொன் மானை
தடாகத்தில் மீனொன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
இதை விட பெண்ணின் கண்களுக்கு ஒரு அழகான உவமை சொல்லமுடியுமானு தெரியலை
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேர அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
அழகுக்கு அழகு சேர்க்கும் வார்த்தைகள்...........
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
என்னை இழந்த பின்னும் எறிய துடிக்க என்னும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னை என்னும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்
சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன்
இந்த பாட்டு அதே படத்தில் நாளும் உந்தன் உறவைனு தொடங்கும் சோக பாடல் .... படத்தின் இறுதியில் இந்த பாடல் இடம் பெரும் ... இதுலே நம்ம டிஆர் கத்தி குத்து வாங்கி உடம்பெல்லாம் ரத்தத்தோட ஒரு சின்ன முதல் உதவி கூட இல்லாம சுமார் ஒரு ஐந்து நிமிஷம் பாடுவார் ( இது தனி காமெடி ) நம்ம கதாநாயகி ஒரு கண்ணாடி மாளிகை உள்ள பரத நாட்டியம் ஆடுவாங்க அதை வில்லன் ரசிப்பார்.....இப்போ பாட்டுக்கு வருவோம் ரொம்ப அருமையான வரிகள் உள்ள சோகத்தை அப்படியே காட்டும் விதமான ஒரு பாடல் ........ எஸ் .பி .பாலசுப்ரமணியம் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்..........
படம் - ரயில் பயணங்களில்
பாடல் - வசந்த காலங்கள்
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா ...
அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஆடாதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
மீண்டும் பாருங்க என்னமாதிரி வார்த்தைகளை கொண்டு விளையாடி இருக்கார் மனுஷன் அப்பறம் இசை மனசோடு ஒட்டிக்கொள்ளும் ... ஜெயச்சந்திரன் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்
இது அதே படத்தில் வசந்தம் பாடின்னு துடங்கும் பாடல் !!!!இதை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் எவ்வளோ அழகாக வார்த்தைகள் பாருங்க.
ஒரு முறையே பார்க்க
அதில் உள்ளம் தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க
தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங் காவேரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு
இன்னும் நிறைய இருக்குங்க எழுத நேரம் இல்லை, ஆபீஸ்ல எவ்ளோதான் எழுத முடியும் சொல்லுங்க.... பாக்குறவங்க தப்ப நினைபாங்க இல்லை எதோ நாஞ்சில் பிரதாப் ப்ளாக் பார்த்து ஒரு வேகத்துலே எழுத துவங்கிட்டேன்.... ஏன்னா நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்கள் இவை..... அதனால இப்ப ஒரு கமா போடறேன்... சமயம் வரும் போது மீண்டும் எழுதுவேன் .........
என்னவனும் நானும் என் மழையும்
எப்பவுமே என்னை மழையோடு சேரவிடாமல் பிரித்து, ஏன் என்ற என் கேள்விக்கு பதிலாய் அக்கறைன்னு கோடிட்டு காட்டி சிரித்த என்னவனை நானும் என் மழையும் சேர்ந்து தோற்கடித்தால் எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்... அப்படியே எழுத்தாகிட்டேன்.............
முதல் துளி மண்ணை தொட
இரண்டாம் துளியை பிடிக்க நான் கையேந்தி வரைந்தேன்
அத்துளியோ என்னை பார்த்து கண் சிமிட்டி
என் கணங்களில் கலக்க
தொடர்ந்து விரைந்த பல துளிகள்
என்னோடு உறவாட
நானும் எனை மறந்து காற்று குதிரை ஏறி
என் கார்குழல் பரக்க மழையோடு மோதினேன்
தோற்ற நான் துவண்டு அழ
தேற்ற என்னோடு சேர்ந்து அழுதது என் மழை
எங்கள் இருவரையும் பிரிக்க அங்கே வந்த
என்னவனின் குடையை ஒரே பாய்ச்சலில் தட்டிவிட்டது
என் காற்று குதிரை ........ என்னவனின் வாடிய முகத்தை
பார்த்து என்னோடு சேர்ந்து சிரித்தது என் மழை ..............
Tuesday, December 15, 2009
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
திரைப்படம் : ரம்பையின் காதல்
திரை இசை : T.R. பாபா அவர்கள்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பாடல் ஆசிரியர் : மருதகாசி அவர்கள்
பாடல்
சமரசம்ம்ம்.....
உலாவும் இடமே ....
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோறேன்றும்
தாழ்ந்தவர் தீயோறேன்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே
அரசனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே
சேவை செய் தியாகி
சிங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை
நாடிடும் யோகி
எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே
http://www.hummaa.com/music/album/Rambaiyin%20Kaathal/14081
இங்கே சொடுக்கி பாட்டை கேட்கலாம்
Monday, December 14, 2009
நீ எனக்காக !!!
என் இமை மூடி உன் தோள் மீது தலைசாயும் போது
காதலின் சுவடுகள் இதுதானோ
நீ இருக்கும் பிரதி நிமிடமும் என் வானில் பூ மழை
உன்னோடு வாழ்ந்தால் கஷ்டங்களும் இஷ்டங்களே
உன்னோடு வாழ்ந்தால் வார்த்தைகள் கூட கவிதையாகி போகும்
உன்னோடு வாழ்ந்தால் நிஜமாகும் சுவர்க்கம்
நீ என் சுவாசத்தின் ஆதாரம்
நீ என் புன்னகையின் வண்ணம்
நீ என் எண்ணகளின் மின்னல்
நீ என் கண்களின் ஒளி
நீ என் இதயத்தின் துடிப்பு
என் வாழ்நாள் முழுதும் பார்க்கவேண்டும் உன் புன்னகை
இந்த சந்தோசம் நிலைக்க வேண்டும் என் நினைவுகளில்
மீண்டும் ஒரு அர்த்தமுள்ள பாடல்
இப்புவியில் எபோதும் இரண்டே பிரிவுகள் பணம் உள்ளவன் , பணம் இல்லாதவன் .... இந்த பாட்டு அந்த பாகுபாட்டை தெளிவாக கூறிகிறது .
வாழ்க்கை பந்தயத்தில் எபோதும் பணம் படைத்தவன் கையே ஓங்கி நிற்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.....
பாடல் இடம் பெற்ற படம் : பணம் பந்தியிலே
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
இசை : கே.வி. மகாதேவன் அவர்கள்
எழுதியவர் : க.மு. ஷேரிப்ப் அவர்கள்
பாடல்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
மனிதன் இல்லே பிழைக்கும் மனித இல்லே
ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே
அவனை உயர்த்தி பேச மனித கூடம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்தாலும் பணம் இல்லாத ஆளை
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காக தான்
பணம் பறந்து விட்டால் புகழ்ந்த கூடம் இகழும் உன்னை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
இதை இனி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
உன்னால் உயர்த்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் நீயும் மதித்து அவரை துணிவுமே கொண்டு
நாளை முயன்று நீயும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
இப்போ சொல்லுங்க இந்த பாட்டு ரொம்ப எளிமையாவும் அதே சமயம் ஆழமாவும் இருக்கு இல்லையா..
உங்க கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
http://www.hummaa.com/music/album/13932/Panam+Panthiyile இங்கே சொடுக்கி இப்பாட்டை கேளுங்கள்
Thursday, December 10, 2009
Wednesday, December 9, 2009
பாடல் - உதவி வேண்டும் - ப்ளீஸ்
Tuesday, December 8, 2009
புல்
தோழமையே !!!!!!!!!!!!!!!!!!!!
காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்
பாதையில் வரும்
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை
எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என
ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….
சாம்பு........
Thursday, November 12, 2009
நம்மை போல் ஒருவன்
விக்ரம் ரசிகனா இர்ருக்க கூடாத என்ன ??? சூர்யா ரசிகன் ? கமல் ரசிகன் ? இவங்களுக்கெல்லாம் இவன் (விஜய்) படத்த பார்த்த கோவமே வரதா ? I am just a stupid common man Mr.Marrar. Harrif,
இருகர அந்த ஒரு படத்த அழிச்சுடுங்க .அத வெளியே விட்டா அதை பாத்து நிறைய பேர் படம் எடுக்க ஆரமிச்சுடுவாங்க ...
Wednesday, November 11, 2009
நானும் நீயும்
Tuesday, November 10, 2009
அமரர் கல்கியின் " அலை ஓசை "
கல்கி - அலை ஒசை: பாகம் 1 - பூகம்பம்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp205.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 2 - புயல்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp206.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 3 - 'எரிமலை'
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp208.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp210v4p1.htm
Monday, November 9, 2009
காதல் உணர்வு
நல்ல நட்பு பூப்பதைப்போல
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்
ஆனால்
காதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு
அதில் ஒரு பூதான் பூக்கும்
அந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்
இன்னொரு பூ பூக்கும்
காதலிக்கும் நூறுபேரும்
கைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட விரல்களைப்போல
நம்முடனேயே இருப்பார்கள் என்றில்லை
வண்ண வண்ண எழிற் கோலங்களில்
நம் உயிர் கரைந்து போனதை
அந்த வண்ணத்துப் பூச்சியிடமே
நாம் சொல்லாததைப்போல
அந்த நூறுபேரிடமும் நம் காதலைச்
சொல்லிவிட்டோம் என்றுமில்லை
வீசிச் செல்லும் வசந்தக் காற்று
சுகத்தையெல்லாம்
நம்மிடம் நிறைவாய்க் கொட்டிவிட்டு
நாம் யாரென்றும் அறியாததாய்
விலகிப்போவதைப்போல
அந்த நூறுபேரும்
நம்மைக் காதலித்தார்கள் என்றுமில்லை
ஆனால்
ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
அந்த நூறுபேரும்
நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
வாசனைப் புகையாய்
நினைவும் நினைவுமல்லாததுமான
வினோதக் காற்றில்
கரையவைத்துச் சென்றிருப்பார்கள்
ஆமாம்
காதல் ஓர் அற்புத உணர்வு
அது இதயத்தின் முழுமொத்தத்துடன்
மல்லுக்குநின்ற உயிரின் பேரவஸ்தை
ஆயினும் ஓர் உண்மையை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
அந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்
உயிரில் நங்கூரம் செழுத்தி
நகராமல் கிடப்பதைத் தவிர்க்க
எவராலும் இயலுவதில்லை
அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிருரசிய தொண்ணூற்றொன்பது பூவிலும்
தன் வாசனையின் ஓரத்தை
அப்பி வைத்திருப்பதை
உணராமல் இருக்க முடிவதில்லை
அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்
நிரந்தரமாய்க் களவாடிக்கொண்டு
மற்றொன்றை ஜென்மத்திற்கும் தவிக்கவிடாமல்
இருப்பதில்லை
எப்படியோ...
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்தான்
ஏனெனில்
நட்பைத் தவிக்கலாம்
காதலைத் தவிர்க்க முடியாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா
காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க
காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை
காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர
காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்
காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்
காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்
..........................................................................................
இது என் நண்பனின் படைப்பு
உங்களோடு பகிர்கிறேன்
Thursday, November 5, 2009
நான் !!!! நீ !!!! நம் மழை !!!!!!!
இங்கே நான் ! என்னுள் நீ ! இது நம் மழை
Wednesday, November 4, 2009
எனக்குள் நீ ( பாகம் இரண்டு )
வர்ஷினி இவருக்கும் பொதுவான தோழி. இவளை பார்த்த வர்ஷி ஓடி வந்து கட்டி பிடித்து கதறினாள். அதற்கு மேல் இவளும் கதறிவிட்டாள். வர்ஷியின் அம்மா இவர்களை தனித்து விட்டு சென்றுவிட்டார்கள்.
வர்ஷி மெல்ல இவளை தேற்ற எத்தனித்தாள் அனால் அவள் முயற்சி பலிக்கவில்லை அந்த சமயம் டேவிடும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரின் பேச்சிலும் அவள் மாறவில்லை. அபோதுதான் அது நடந்தது அச்சு ( ஆம் அது தான் அவன் பெயர் ) அவளை காதலித்தது அவளுக்கு தெரியவந்தது. டேவிட் பேச்சோடு பேச்சாக அதை சொல்லிவிட்டான்.
இவள் அதிர்ந்து டேவிடை பார்த்தபோது தான் அது அவனுக்கே உறைத்தது. அனால் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் மறைக்க முடியாமல் டேவிட் இத்துணை நாள் அச்சு தன் மனதிற்குள் பூட்டிய அவனுடைய காதலை நித்திலாவிடம் ( இது தான் அவள் பெயர் ) கொட்டிவிட்டன். விதி வலியது . இதை நம்ப மறுத்த நித்திலாவிடம் அச்சுவின் டயரியை வர்ஷி கொடுத்தாள். நித்திலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை கோபம் அழுகை எல்லாம் ஒருசேர அசைவற்று நின்றாள். அச்சு இன்று இல்லை என்பதை இவளால் இன்னும் நம்பமுடியவில்லை அதற்கு மேல் அவனின் காதல்.
இத்தனை நாள் எத்தனை பகிர்வுகள் நித்திலாவின் இன்பம் துன்பம் கோவம் என எல்லாவற்றிலும் பாதியாயை நின்ற அச்சு எங்கே இத்துணை உருதுனைகும் பின்னல் நின்றது காதல்தானா.... இவை காதலுக்காக என்றால் என் நட்பு எங்கே.... (தொடரும்........)
எனக்குள் நீ
Monday, October 12, 2009
விடுகதை
வாழ்க்கை விடுகதைகளின் குழுமம் !!!
சிலசமயம் விடையை கையில் வைத்துக்கொண்டு வினாக்களை தேடி ஓடுகிறோம், சற்றே வளைத்தாலும் ஒடிந்து விடும் ஒரு நேர் கோட்டை போல்
பலசமயம் வினாக்களை கையில் வைத்துக்கொண்டு விடைகளை தேடி ஓடுகிறோம் சுற்ற சுற்ற வெளி வர முடியாத வளையத்தை போல்
வினாக்களை தூர எரிந்து, விடைகளை களைந்து, வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து நிற்கும் ஒரு நாணலை போலநாம் வாழ பழகினால் என்ன ????
இந்த வினாவிற்கு விடை தேடுகிறேன் .........
இருட்டு நதியில் நதியில் இதமாய் மிதக்கும் குருட்டு படகை போல ........
நான் காத்திருக்கிறேன்
ஆமாம் காத்திருக்கிறேன்.........
மண்ணை தொடும் முதல் மழை துளிக்காக..........
மாலை வேளையில் விண்ணில் தோன்றும் நிலவுக்காக
என் கால்களை முத்தமிட ஓடி வரும் கடலைக்காக
கண்களை மூடியவுடன் நிழலாடும் உன் புன்னகைக்காக
என் கண்ணில் துளிரும் முதல் கண்ணீர் துளிக்காக
அந்த முதல் துளியை துடைக்க விரையும் உன் கை விரலுக்காக
உன்னிடமிருந்து அன்பை சுமந்தது வரும் ஒரு குறுஞ்செய்திக்காக
என் காத்திருப்பின் சுகம் தெரியும் எனக்கு !!!!!
என் காத்திருப்பின் சுமை தெரியுமா உனக்கு ?????????