Monday, October 12, 2009

விடுகதை

வாழ்க்கை விடுகதைகளின் குழுமம் !!!

சிலசமயம் விடையை கையில் வைத்துக்கொண்டு வினாக்களை தேடி ஓடுகிறோம், சற்றே வளைத்தாலும் ஒடிந்து விடும் ஒரு நேர் கோட்டை போல்

பலசமயம் வினாக்களை கையில் வைத்துக்கொண்டு விடைகளை தேடி ஓடுகிறோம் சுற்ற சுற்ற வெளி வர முடியாத வளையத்தை போல்

வினாக்களை தூர எரிந்து, விடைகளை களைந்து, வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து நிற்கும் ஒரு நாணலை போலநாம் வாழ பழகினால் என்ன ????

இந்த வினாவிற்கு விடை தேடுகிறேன் .........

இருட்டு நதியில் நதியில் இதமாய் மிதக்கும் குருட்டு படகை போல ........

5 comments:

  1. பப்பி
    உன்னோட இந்த 'விடுகதை ' ரொம்ப நல்லா இருக்கு.நீ மறுபடியும் எழுத ஆரம்பிச்சது ரொம்ப சந்தோஷம்.அழகான தமிழ் வார்த்தைகளை நீ அற்புதமான வரிகளாய் மாற்றி இருக்கிறாய்.
    இரண்டு திருத்தங்களை நான் சொல்லலாமா?
    ௧) உன்னோட தலைப்புக்கு கீழே 'சிதறும் மழை துமிகளின்' என்பதை ''சிதறும் மழை துளிகளின்' என்று மாற்ற முடியுமா?
    ௨) 'வாழ்கை' என்பதை 'வாழ்க்கை' என்றும் 'வளைதாலும்' என்பதை 'வளைத்தாலும்' என்றும் மாற்றினால் மிக சிறப்பாக இருக்கும் அன்பு தோழியே..
    வாழ்த்துக்களுடன்,
    உன் நண்பன்,
    பூங்குன்றன்
    poongundran2010.blogspot.com

    ReplyDelete
  2. அழகான வரிகள் அர்த்தமுள்ள வரிகள் வாழ்த்துக்கள் திரும்பவும்

    ReplyDelete
  3. தலைப்பில் இருக்கும் மழை துமியை மாற்றிவிட்டு மழை துளிகள் என்றிடுங்கள் தோழி..

    ReplyDelete