Wednesday, November 4, 2009

எனக்குள் நீ ( பாகம் இரண்டு )

அதற்குமேல் அந்த அம்மா கூறிய யாவும் அவள் மூளையில் பதிந்தது அனால் அவள் ஸ்மரணை அற்று ஒரு கற்சிலை போல நின்றாள். இமைகள் கூட மூட மறுத்து அசைவற்று நின்றது. அந்த அம்மா இவளின் நிலை கண்டு சற்று பதறி இவளை உலுக்க இவுலகுக்கு வந்தாள். மௌனமே வார்த்தையாக அந்த அம்மாவை கண்ணீர் மல்க ஒருமுறை பார்த்தாள் பின் மெதுவாக திரும்பி நடந்தாள். வாசல் வரை கூட வரவில்லை பின்னால் வந்த குரல் அவளை தடுத்தது அது டேவிட் அவனின் நண்பன் .. இவள் மெல்ல நிமிர்த்து பார்த்தாள். அபோது டேவிட் " என்னமா உன் சைக்கிள் கூட மறந்து போற ? பார்த்து மா நான் உன் வீடு வரை வரட்டுமா " இந்த கேள்விக்கு பதில் சொல்ல கூட தெரியாமல் மௌனமாய் தன் சைக்கிளை தள்ளிய படி வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்ட கூட தோன்றாமல் உருட்டிய படியே நடந்தாள். சிறிது தூரத்தில் மீண்டும் டேவிடின் குரல் அனால் இந்த முறை இவள் நிற்க வில்லை ஏனோ ஒன்றும் பேசாமல் நடந்தாள் எங்கே போவது என்று கூட தெரியாமல் வர்ஷினியிடம் சென்றாள்.

வர்ஷினி இவருக்கும் பொதுவான தோழி. இவளை பார்த்த வர்ஷி ஓடி வந்து கட்டி பிடித்து கதறினாள். அதற்கு மேல் இவளும் கதறிவிட்டாள். வர்ஷியின் அம்மா இவர்களை தனித்து விட்டு சென்றுவிட்டார்கள்.

வர்ஷி மெல்ல இவளை தேற்ற எத்தனித்தாள் அனால் அவள் முயற்சி பலிக்கவில்லை அந்த சமயம் டேவிடும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரின் பேச்சிலும் அவள் மாறவில்லை. அபோதுதான் அது நடந்தது அச்சு ( ஆம் அது தான் அவன் பெயர் ) அவளை காதலித்தது அவளுக்கு தெரியவந்தது. டேவிட் பேச்சோடு பேச்சாக அதை சொல்லிவிட்டான்.

இவள் அதிர்ந்து டேவிடை பார்த்தபோது தான் அது அவனுக்கே உறைத்தது. அனால் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் மறைக்க முடியாமல் டேவிட் இத்துணை நாள் அச்சு தன் மனதிற்குள் பூட்டிய அவனுடைய காதலை நித்திலாவிடம் ( இது தான் அவள் பெயர் ) கொட்டிவிட்டன். விதி வலியது . இதை நம்ப மறுத்த நித்திலாவிடம் அச்சுவின் டயரியை வர்ஷி கொடுத்தாள். நித்திலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை கோபம் அழுகை எல்லாம் ஒருசேர அசைவற்று நின்றாள். அச்சு இன்று இல்லை என்பதை இவளால் இன்னும் நம்பமுடியவில்லை அதற்கு மேல் அவனின் காதல்.

இத்தனை நாள் எத்தனை பகிர்வுகள் நித்திலாவின் இன்பம் துன்பம் கோவம் என எல்லாவற்றிலும் பாதியாயை நின்ற அச்சு எங்கே இத்துணை உருதுனைகும் பின்னல் நின்றது காதல்தானா.... இவை காதலுக்காக என்றால் என் நட்பு எங்கே.... (தொடரும்........)

2 comments:

  1. நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. உண்மைகள் நிறைய அதிர்வுகளை அடக்கியுள்ளது... ஏன் தொடரவில்லை...

    ReplyDelete