டிஆரின் கவிதைகள்
பல கேலிகளும் கிண்டல்களும் இருந்தாலும் நாம் ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம் டிஆரின் இசையும் பாடல் வரிகளும்........அவர் எழுதி இசை அமைத்த சில பாடல் வரிகள் மிக அற்புதமானவை...........என் மனம் கவர்ந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் தங்களின் மேன்மையான கருத்துகளையும் எதிர்நோக்குகிறேன்
படம் : மைதிலி என்னை காதலி
பாடல் : ஒரு பொன் மானை
தடாகத்தில் மீனொன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
இதை விட பெண்ணின் கண்களுக்கு ஒரு அழகான உவமை சொல்லமுடியுமானு தெரியலை
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேர அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
அழகுக்கு அழகு சேர்க்கும் வார்த்தைகள்...........
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
என்னை இழந்த பின்னும் எறிய துடிக்க என்னும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னை என்னும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்
சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன்
இந்த பாட்டு அதே படத்தில் நாளும் உந்தன் உறவைனு தொடங்கும் சோக பாடல் .... படத்தின் இறுதியில் இந்த பாடல் இடம் பெரும் ... இதுலே நம்ம டிஆர் கத்தி குத்து வாங்கி உடம்பெல்லாம் ரத்தத்தோட ஒரு சின்ன முதல் உதவி கூட இல்லாம சுமார் ஒரு ஐந்து நிமிஷம் பாடுவார் ( இது தனி காமெடி ) நம்ம கதாநாயகி ஒரு கண்ணாடி மாளிகை உள்ள பரத நாட்டியம் ஆடுவாங்க அதை வில்லன் ரசிப்பார்.....இப்போ பாட்டுக்கு வருவோம் ரொம்ப அருமையான வரிகள் உள்ள சோகத்தை அப்படியே காட்டும் விதமான ஒரு பாடல் ........ எஸ் .பி .பாலசுப்ரமணியம் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்..........
படம் - ரயில் பயணங்களில்
பாடல் - வசந்த காலங்கள்
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா ...
அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஆடாதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
மீண்டும் பாருங்க என்னமாதிரி வார்த்தைகளை கொண்டு விளையாடி இருக்கார் மனுஷன் அப்பறம் இசை மனசோடு ஒட்டிக்கொள்ளும் ... ஜெயச்சந்திரன் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்
இது அதே படத்தில் வசந்தம் பாடின்னு துடங்கும் பாடல் !!!!இதை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் எவ்வளோ அழகாக வார்த்தைகள் பாருங்க.
ஒரு முறையே பார்க்க
அதில் உள்ளம் தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க
தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங் காவேரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு
இன்னும் நிறைய இருக்குங்க எழுத நேரம் இல்லை, ஆபீஸ்ல எவ்ளோதான் எழுத முடியும் சொல்லுங்க.... பாக்குறவங்க தப்ப நினைபாங்க இல்லை எதோ நாஞ்சில் பிரதாப் ப்ளாக் பார்த்து ஒரு வேகத்துலே எழுத துவங்கிட்டேன்.... ஏன்னா நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்கள் இவை..... அதனால இப்ப ஒரு கமா போடறேன்... சமயம் வரும் போது மீண்டும் எழுதுவேன் .........
T.R. கவிதைகள்/பாடல்கள் மட்டும் எழுதி இருந்திருக்க கூடாதா என்று ஏங்கும் உள்ளங்களில் நானும் ஒருத்தி. மற்ற "திறன்கள்" இந்த கவிஞரின் திருஷ்டி பொட்டுக்கள்.
ReplyDeleteஉங்களுக்கு தெரியுமா? அவர் எங்க பல்கலைக்கழகத்தில் படித்தவர்..
ReplyDeleteஉண்மைதான்..நாம என்னதான் அவரை கிண்டல் பண்ணாலும் பலகலை தெரிந்த டி.ஆரை மெச்சவேண்டும்.உன் வர்ணனையும் பாடலோடு சேர்ந்து நல்லா இருந்தது.
ReplyDeleteகொஞ்சம் கவிதையும் வெளியிடும்மா.
மிக பெரிய திறமைசாலி .. எல்லா துறைகளிலும் காலை வைத்ததால் அவரின் இயல்பான திறமைகள் (இசை , கவிதை , இயக்கம் ) முழுமையாக வெளிப்படவில்லை ...
ReplyDeleteஇந்த மாதிரி உருவ அமைப்பு கொண்டவர்களை இந்த உலகம் எவ்வாறு நடத்தும் என்பது அறிந்ததே.. அதையும் மீறி அவர் வெற்றி பெற்று இருப்பது அவருடைய மன உறுதியையும் , திறமையும் காட்டுகிறது
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
சலங்கை இட்டால்
ReplyDeleteநானும் ரசிக்கும் சில வரிகள் அவை
இன்னிக்கி கவிதை இல்லியா ?????
//இன்னும் நிறைய இருக்குங்க//....உண்மைதான்!
ReplyDeleteவெரி நைஸ்!
"யப்பா" வுக்கு பரிகாரமா.. இன்னும் நிறைய பேருக்கு தெரியல இன்னும் எடுத்து சொல்லுங்க..
ReplyDeleteநல்ல பதிவு ஆழிமழை... எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் எல்லாமே... அவரோட இன்னொரு பாடலான வாசமில்லா மலரிது பற்றியும் எழுதியிருக்கலாம்..வார்த்தைகள் எல்லாம் அருமையா இருக்கும்...
ReplyDelete//ஆபீஸ்ல எவ்ளோதான் எழுத முடியும் சொல்லுங்க.... பாக்குறவங்க தப்ப நினைபாங்க இல்லை//
இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு... நாங்கல்லாம் பதிவு போடுறதே ஆபிஸ்ல உக்காந்துதான்.
ஹஹஹ எத்தனை பேருக்குத்தான் என் பதிவுகள் இன்ஸ்பிஷேனா இருக்கும்... நீங்களுமா???:-)
அதுக்கு ஏன் டி.ஆரோட இத்தனை போடோஸ் போட்டுருக்கீங்க...டெரரா இருக்கு...புள்ள பயந்துருச்சுல்ல...
ReplyDeleteதடாகத்தில் மீனொன்று காமத்தில் தடுமாறி
ReplyDeleteதாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ //
இந்த வரிகளுக்கு படத்தில் வரும் காட்சியும் மிக ரசிக்கும்படி இருக்குங்க.
//செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஆடாதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ//
மிக அழகான கற்பனை... நான் மிக ரசித்த வரிகளில் இதுவும் அடக்கம்.
டி.ஆரின் உஷா இதழில் வெளியான அவரின் கவிதைகளை வாசித்து ரசித்து பின் கவிதைகள் எழுதி.... நானும் ஒரு கவிஞனாக ஒரு நூலும் வெளியிட்டேன் என்றால் அது திரு டி.ஆர் அவர்களால் தான். பகிர்வுக்கு நன்றிங்க.
/தடாகத்தில் மீனொன்று காமத்தில் தடுமாறி
ReplyDeleteதாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ/
அழகான வரிகள். நான் இப்பாட்டுக்கு பரதம் ஆடியது[9 வயதில்தோழியோடு ] பாட்டு முழுவதும் மனப்பாடம். அதெல்லாம் இப்போ நினைத்தாலும் ஆனந்தம் அவரின் பாடல் வரிகள் அத்தனையும் அழகான கோர்வையில் இருக்கும் , பகிர்தமைக்கு மகிழ்ச்சி
மல்லிகா நானும் இந்த பாட்டுக்கு ஆடி இருக்கேன் பள்ளி ஆண்டு விழாவில் !!!!! அது பசுமையான நினைவுகள் !!! கருத்துக்களுக்கு நன்றிகள்
ReplyDeleteகருணாகரசு கருத்துக்களுக்கு நன்றிகள் !!! நானும் அந்த இதழை வசித்து இருக்கேன்... எப்படி இவரால மட்டும் இந்த மாதிரி யோசிக்க முடியுதுன்னு நினைச்சு வியந்து இருக்கேன்
ReplyDeleteநாஞ்சில் பிரதாப் கருத்துக்களுக்கு நன்றிகள் !!! இதனை படங்கள் போட காரணம் சும்மா ஒரு விளம்பரம் தான்........................... வாசமில்லா மலர் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதை போடலாம்னு நினைச்ச வேளையில் என் பாஸ் சரியா மீட்டிங் கூப்பிட்டாரு என்ன செய்ய !!!
ReplyDeleteநன்றிகள் Sivaji Sankar !!! ஹ்ம்ம்ம் அமாம் எனக்கு அவர் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்...
ReplyDeleteநன்றிகள் பிரியா
ReplyDeleteநன்றிகள் ஸ்ரீநி !!! கவிதை இன்னைக்கு இல்லை !!!
ReplyDeleteநன்றிகள் மீன்துள்ளியான் !! நீங்க சொல்றது உண்மைதான் !!! அவர் மட்டும் இசை கவிதைன்னு மட்டும் இருந்திருந்தால் கேட்க்க கேட்க்க சலிக்காத பாடல்களை அள்ளி அள்ளி கொடுத்திருப்பார் என்பதில் ஐயம் இல்லை
ReplyDeleteநன்றிகள் அண்ணாமலையான், அப்படியா பெருமைக்குரிய விஷயம்
ReplyDeleteநன்றிகள் சித்ரா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை
ReplyDeleteநன்றிகள் கதிர்
எங்கே கானோம்?
ReplyDeletehm, unmai, arputhamaana varigal
ReplyDelete