Wednesday, December 16, 2009

என்னவனும் நானும் என் மழையும்




இதை நான் கவிதைன்னு சொல்ல மாட்டேன் .....
எப்பவுமே என்னை மழையோடு சேரவிடாமல் பிரித்து, ஏன் என்ற என் கேள்விக்கு பதிலாய் அக்கறைன்னு கோடிட்டு காட்டி சிரித்த என்னவனை நானும் என் மழையும் சேர்ந்து தோற்கடித்தால் எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்... அப்படியே எழுத்தாகிட்டேன்.............



முதல் துளி மண்ணை தொட
இரண்டாம் துளியை பிடிக்க நான் கையேந்தி வரைந்தேன்
அத்துளியோ என்னை பார்த்து கண் சிமிட்டி
என் கணங்களில் கலக்க
தொடர்ந்து விரைந்த பல துளிகள்
என்னோடு உறவாட
நானும் எனை மறந்து காற்று குதிரை ஏறி
என் கார்குழல் பரக்க மழையோடு மோதினேன்
தோற்ற நான் துவண்டு அழ
தேற்ற என்னோடு சேர்ந்து அழுதது என் மழை
எங்கள் இருவரையும் பிரிக்க அங்கே வந்த
என்னவனின் குடையை ஒரே பாய்ச்சலில் தட்டிவிட்டது
என் காற்று குதிரை ........ என்னவனின் வாடிய முகத்தை
பார்த்து என்னோடு சேர்ந்து சிரித்தது என் மழை ..............

28 comments:

  1. மழைன்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரியும்.. ஆனா இவ்ளோ பிடிக்கும்னு தெரியாதுப்பா. கவிதை தான்,படம்,விளக்கம் மழை மாதிரி சில்லுன்னு இருக்கு..

    கீப் ரைட்டிங்..

    ReplyDelete
  2. என்னோடு சேர்ந்து சிரித்தது என் மழை” எப்படி சிநேகா மாதிரியா?

    ReplyDelete
  3. நல்லா இருக்கு . . . சீக்கிரம் முடிஞ்சுருச்சு

    ReplyDelete
  4. அருமை...நிறைய எழுதவும்

    ReplyDelete
  5. நல்லாருக்குங்க கவிதை...எனக்கும் கவிதை எழுதனும் ஆசை... எப்படிங்க எழுதறது...

    ReplyDelete
  6. /பரக்க/ பறக்க ன்னு வருமுன்னு நினைக்கிறேன் தோழி என்னைபோலவே நீங்களும் மழைக்காதலி..

    ReplyDelete
  7. //முதல் துளி மண்ணை தொட
    இரண்டாம் துளியை பிடிக்க நான் கையேந்தி வரைந்தேன்
    அத்துளியோ என்னை பார்த்து கண் சிமிட்டி
    என் கணங்களில் கலக்க
    தொடர்ந்து விரைந்த பல துளிகள்
    என்னோடு உறவாட
    நானும் எனை மறந்து காற்று குதிரை ஏறி
    என் கார்குழல் பரக்க மழையோடு மோதினேன்
    தோற்ற நான் துவண்டு அழ
    தேற்ற என்னோடு சேர்ந்து அழுதது என் மழை//

    மூச்சுவிடாம சொல்லியிருக்கீங்க சூப்பர்ப்...!

    ReplyDelete
  8. மழைக்காலம் என்பதால் நிறைய கவிதைகள் மழைகளால் நிரம்பி வழியுது, மனசும் நல்ல கவிதைகள் படித்த திருப்தியில்

    ReplyDelete
  9. படமும் கவிதை மழையும் அருமையோ அருமை. மழையோடு மழையாய் ஒன்றி எழுதிய கவிதை.

    ReplyDelete
  10. அழகான ஒரு மழை கவிதை...
    ரொம்ப நல்ல இருக்கு
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. //இதை நான் கவிதைன்னு சொல்ல மாட்டேன் .....
    எப்பவுமே என்னை மழையோடு சேரவிடாமல் பிரித்து, ஏன் என்ற என் கேள்விக்கு பதிலாய் அக்கறைன்னு கோடிட்டு காட்டி சிரித்த என்னவனை நானும் என் மழையும் சேர்ந்து தோற்கடித்தால் எப்படி இருக்கும்னு //

    இதுவே கவிதைதானே! கலக்குங்க தோழி

    ReplyDelete
  12. தோழி உங்க மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? murli03@gmail.com

    ReplyDelete
  13. முரளி வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் உங்க மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுபயுள்ளேன்

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் கமலேஷ்

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் சித்ரா

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் தமிழ் உதயம்

    ReplyDelete
  17. தங்கள் கருத்துரைக்கு எனது நன்றிகள் வசந்த்

    ReplyDelete
  18. ஆம் மல்லிகா நான் ஒரு மழை கிறுக்கு !!! தவறை திருத்திடறேன்

    ReplyDelete
  19. நாஞ்சில் பிரதாப் இதுக்கு பெயர் தான் தன்னடக்கமோ ?????????

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  21. நன்றிகள் ஸ்ரீநி

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள், என் மழையோட சிரிப்பை நீங்க சிநேகா கூட ஒப்பிட்டது தவறு பெரும் தவறு......... நான் இதை வன்மையாக கண்டிக்கறேன்...... என்ன கொடுமை அண்ணாமலையான் இது

    ReplyDelete
  23. Superb. :)//கணங்களில்// கன்னங்களில் என்று இருக்கா வேண்டுமோ?

    ReplyDelete
  24. //இருக்கா// அது இருக்க

    ReplyDelete
  25. நான் எழுத ஊக்குவித்தாயே கதிர் ஒற்றை வார்த்தையான நன்றியில் நான் எப்படி நன்றி சொல்வது ??????

    ReplyDelete
  26. நம்ம ப்லாக் பக்கமும் வந்துட்டு போங்க. அங்கு மழை இல்லை. அதான் யோசிக்கிறேன்.

    ReplyDelete
  27. அருமையான கவிதை .... கிளப்புறீங்க

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  28. அருமை தங்களின் துளிகள்

    ReplyDelete