Monday, December 21, 2009

இது ஒரு கவிதையான விடுகதையின் கதை - விடை இங்கே !!!


ஒரு ஊரில் ஒரு புலவன் இருந்தானாம் அவன் தமிழ் பற்றுள்ளவன்... பற்றுதலின் காரணமாக தமிழில் மேன் மேலும் தேர்ச்சி பெற்றான் .... தேர்ச்சியின் விளைவாக தமிழ் அறிவில் நிகரற்ற நிலை பெற்றான் .... அந்த நிலையினால் புகழ் சேர்த்தது, புகழோடு சேர்ந்து செருக்கும் சேர்ந்தது, செருக்கின் விளைவாக ஆணவம் குடிகொண்டது அவனிடம் .... மற்றவரை மதியாமல் மிதித்தான் ...... இவன் இவாறு இருக்க ... இவனுடன் யாரும் பேசுவதில்லை இவன் ஆனவக்குனதால் கற்ற தமிழின் பெருமை மங்கியது ... அவன் இவாறு இருக்க .....................

ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்ட ஒரு உபாதையால் ஒரு மருத்துவரை நாடி சென்றான் !!!! மருத்துவர் ரொம்ப அமைதியானவர் !!! சாந்த சொரூபி !!! நிறைகுடம் !!!!! தனக்கு எல்லாம் தெரிந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்பவர் !!!! நம்ம புலவர் அங்கே வந்த சமயம் ஒரு சிலர் மிக அன்புடன் மருத்துவரிடம் வார்த்தையாடி கொண்டு இருந்தனர் .... புலவருக்கு பொறுக்கவில்லை... மருத்துவரின் உதவியாளரை செற்றே கடிந்து பணித்தார் ..... உதவியாளரோ உள்ளே சென்று, வெளியே வந்து மருத்துவரின் மொழியாடல் நொடிகளில் முடிந்துவிடுமாம் !!!!!!!!!! நீங்கள் சற்று பொறுமை காக வேண்டும் என்று பணிவுடன் கூறினான்... பொறுப்பாரா நம் புலவர் உடனே புயலென உள்ளே புகுந்தார் ....


இருக்கையில் அமர்ந்தார் !!!! மருத்துவர் அப்போதும் அமைதி காத்து !!! என்ன அவசரமோ ஐயா நீர் இப்படி புயலென துடித்து வர காரணம் தான் என்ன ???? என்று அமைதியே உருவாக வினவினார் !!!!

நம்ம புலவர் சும்மா இருப்பாரா !!! மருத்துவர் ஐயா அவசரம் தான் உயிர் போகும் அவஸ்தையும் கூட .
கேளுங்கள் .............

முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று

என்று புதிர் போட்டார் !!!!!

மருத்துவர் சிறிது சிந்தனைக்கு பின் சுற்றி உள்ளோரை ஒருமுறை பார்த்து சிரித்தார் ..... அவர்களோ ஒரு பெரிய கேள்வி குறியை முகத்தில் தேக்கி மருத்துவரை ஆவலோடு நோக்கினர் !!!!! சிறிது நகைப்புக்கு பின் மருத்துவர் புலவரை நோக்கி முறுவல் மாறாமல் !!!

ஆம் ஐயா தாங்க முடியா உயிர் கொல்லும் வலிதான் !!! கேளுங்கள் மருந்தை

பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்

என்றுரைத்து பெரிதாக நகைத்தார் !!!! புலவரின் முகத்திலோ ஈ ஆடவில்லை !!! மருத்துவரை வணங்கி பணிவாக அவ்விடத்தை விட்டு அகன்றார் !!!! அவர் செருக்கும் ஆணவமும் அவரை விட்டு அச்ச்சனமே அகன்றது !!!!

இப்போ நீங்க எனக்கு இவ்விரு பாடல்களின் அர்த்தத்தை சொல்ல வேண்டும் !!!!

இது எனக்கு என் தத்தா சொன்ன கதை !!!! உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் !!!!!!!!!!!!!


இந்த கதையை நான் தான் பின்னினேன் !!!! ஹி ஹி ஹி
இப்போ விடை

முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று


இரண்டு கால்கள் மற்றும் கைதடி சேர்ந்து மூன்று கால்கள்
மூவிரண்டு ( 6 வழி பாதை ) நடந்து போகும் போது
அக்காலின் கீழ் காலில் - அடி பாதத்தில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று - 5 தலை கொண்ட நெறிஞ்சி முள் குத்தியது

பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்

பத்துரதன் - தசரதன்
புத்திரனின் - தசரதனின் புத்திரன் ராமன்
மித்துருவின் - ராமனின் மித்துரு சுக்ரீவன்
சத்துருவின் - சுக்ரீவனின் சத்துரு வாலி
பத்தினியின் - வாலியின் பத்தினி தாரை -
காலை வாங்கி தேய் - தாரையின் காலை வாங்கினால் தரை ---
தரையில் தேய்க்க வேண்டும் என்பது பொருள்
ப்ளீஸ் யாரும் அடிக்க வராதீங்க !!!!!!!!

23 comments:

 1. அர்த்தம் ரொம்ப சிம்பிள்:
  --------
  --------
  --------

  'தெரியல'
  கதை மட்டும் நல்லா இருக்கு..ரெடி..ஜூட்..
  -கதிர்

  ReplyDelete
 2. முடியல... ஸ்...யப்பா!

  ReplyDelete
 3. நேத்து வரைக்கும் நல்லாத்தானேங்க இருந்தீங்க...
  இது அதேதான் அதேதான்..

  ReplyDelete
 4. இது எல்லாம் நியாயம் இல்லை .. பரிட்சை அப்படினாலே ஒரு பயம் .. இப்போ தான் அது இல்லாம நிம்மைதிய இருக்கிறேன் ,, இங்கே வந்த மிரட்டுறீங்க ..

  உங்க தாத்தா தான் அந்த வைத்தியரா ?

  ReplyDelete
 5. காலில் முள் குத்தியதும் அதை எடுத்து விட்டு கால் தேய்ப்பதும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. பத்துரதன் புத்திரன் - தசரதன் புத்திரன் - ராமன்
  மிதுருவின் சத்துருவின் - குகனின் எதிரி பற்றி குறிப்பு கிடையாது, ஹனுமனுக்கென்று தனியாய் யாரும் இல்லை ,
  சுக்ரீவனின் சத்ரு - வாலி வாலியின் மனைவி - மிக முக்கிய குறிப்பு பத்தினி - தாரா - நடசத்திரம் - வின் மீன் - கால்
  இங்க தாண்ட லாக் ஆயிட்டான் - இப்போதைக்கு தொடரும்

  ReplyDelete
 7. முன்றாவது கால் - ஊன்று கோல் கொண்டு
  மூவிரண்டு வழி நடக்கயிலே - ஆற்று வழி நடக்கயிலே
  அஞ்சு தல நகம் காலின் கீழ் - நெறிஞ்சி முள் குத்திடுச்சு ;
  மருந்து கண்டுபுடிசுட்டு வரேன்

  ReplyDelete
 8. யுரேகா யுரேகா ( யார்ப அந்த ரேகா )

  கால தரைல தேட கொய்யா ன்னு சொல்லிருக்கார்

  ReplyDelete
 9. ஆமாம் இந்த 'தருமிக்கு' பொர்கிழில்லாம் கெடயாதா

  ReplyDelete
 10. //பத்துரதன் புத்திரனின்
  மித்துருவின் சத்துருவின்
  பத்தினியின் காலை வாங்கி தேய்//

  நான் சொல்லிடுவேன்.. சொல்லிட்டா அடுத்தவங்களுக்கு வாய்ப்பு போயடுமுன்னு கேள்விய விட்டுட்டு போறேன்

  ReplyDelete
 11. யோசிக்கணும்....கொஞ்சம் டைம் தாங்க.

  முன் பதிவு கவிதைகள்,பாடல் வரிகள் எல்லாமே அசத்தல்.நல்லதொரு ரசிக்க்கும் ரசிகை நீங்கள்.

  ReplyDelete
 12. ரொம்ப நன்றிங்க ஹேமா

  ReplyDelete
 13. வருகைக்கும் உங்களோட பெரும் தன்மைக்கும் என்னோட பணிவான வணக்கங்கள் நசரேயன்

  ReplyDelete
 14. ஸ்ரீநி பிண்ணிடீங்க !!!!! சூப்பரு !!!! அவ்சொம் !!!!! என்ன சொல்றதுனே தெரியலை !!!!! பிடிங்க வரத்தை

  நரனே நீ என்டுவன கேள் !!!!

  ReplyDelete
 15. நீங்க சொல்றது சரிதான் சித்ரா !!! ஆனால் கொஞ்சம் அதை பிரித்து சொல்லனும் !!!!

  ReplyDelete
 16. மீன்துள்ளியான் வருகைக்கு நன்றிகள் !!! என்னப்பா இது ................ அம்மட்டும் இச்சிறு கேள்விக்கு நீங்க பயப்படலாமா ???? எவளோ அடிச்சாலும் அதை தாங்கும் வீர வம்சம் அல்லவா நாம் அனைவரும் !!!!

  ReplyDelete
 17. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் பிரதாப் !!! உங்களோட எழுத்துகளை படிக்க படிக்க பிறந்த அறிவு ஊற்று தான் ஐயா இது !!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 18. நம்ம கேப்டன் விஜயகாந்த் ஸ்டைல்லே படியுங்க !! முடியும் இளங்கோவால முடியும் !!!!
  கருத்துக்களுக்கு நன்றிகள்

  ReplyDelete
 19. கலக்றீங்க கதிர் !!!!

  ReplyDelete
 20. அப்ப பரிசும் ஏதும் கெடயாதா
  வெறும் பாவா பிச்கோத்தா !!!!!!!!!!!!!!

  கணம் கோர்ட்டார் அவர்களே ,
  இத வண்ணமய கண்டிக்கிறேன்

  பரிசல் இல்லாம ஒரு போட்டி வச்சு நம்மள காமெடி பீஸ் ஆக்கிடாங்க

  இதுல நீ என்டுவன கேள் வேற.
  சரி சரி வரத்தோட லிஸ்ட் உங்களுக்கு எதுல அனுப்ப ? ? ? ? ?

  ReplyDelete
 21. ஸ்ரீநி குழந்தை... வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் !!!!! விருதுக்க்காகவா எம் போட்டி !!!! நினைத்து பாரீர் !!! வரும் காலத்தில் உம்மை சான்றோன் என புகழின் உச்சாணி கொம்பில் நிறுத்தி அழகு பார்க்கும் இளைய சமுதாயத்தின் குரல் உம் செவிகள் எட்டவில்லையா ...... சரி யாம் வரம் கொடுத்தது தொடுத்தது தான் !!! அதில் மாற்றம் இல்லை இன்று உங்கள் கனவில் நீர் கேட்பது யாவும் கிடைகக்கடவது !!!! ஜோக்ஸ் அபார்ட் யு ஹவ் டன் எ மார்வலஸ் ஜாப் !!! ஐ ரியலி அப்ரிசியாட் இட் ( நம்ம பாரதிராஜா நடையில் படிக்கவும் ).......

  ReplyDelete
 22. முன் கவிதைக்கு...

  !!!

  அப்புறம் இதுக்கு

  :-)))

  ReplyDelete
 23. ungaloda

  inniki kavidhaikku yean comments section close ayirukku
  restricted publicationa ????

  ReplyDelete