காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!
நான் நடக்க உன் கைகளை நீட்டினாய் நீ
- காதலை கண்களில் தேக்கி
உற்சாகத்தோடு உன் விரல் பிடித்து நடந்தேன் நான்
- நட்பின் புன்னகை ஏந்தி
என் கண்களில் கண்ணீர் கண்டு துடைக்க விழைந்தாய் நீ
- காதலின் பரிதவிப்போடு
ஆதரவாய் உன் தோள் சாய்ந்து விசும்பினேன் நான்
-நட்பின் ஆறுதலோடு
வலியின் சாயலாம் சோகத்தை நெஞ்சில் தேக்கி நீ என்னை பார்க்க
- காதலின் கலவரத்தோடு
உன்னை என் மடியில் சாய்த்து தலை கோதினேன் நான்
- நட்பின் அரவணைப்போடு
நட்பின் விளிம்பை தாண்டிய நான் உன்னை தேடுகிறேன் என்றேன் !!!! நீயோ என் இமைகளை மூடச்செய்து நீல கடலின் ஆழத்தில் என்னை நிறுத்தி உன் நினைவு மழையினால் என்னை நினையச்செய்தாய் !!!
உன் கண்ணீர் முத்துக்களினால் முத்தாரம் சூட்டினாய் !!!!
நீ எங்கே என தேடி அலைந்து என் முன்னே வா என்றேன்
- காதலின் வலியோடு
காற்றிலே கலந்த நான் உன் சுவாசமாக இருக்கிறேன் என்றாய்
- காதலின் வெற்றி புன்சிரிப்போடு
நெருங்கும் போது விலகும் காதல்.... விலகும் போது நெருங்குவதேன் !!!
விழியில் நீரை நிறைத்து நான் தேடும் போது ..........
உன்னை மறைப்பதும் ஏன் ?????
Wednesday, December 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//உன்னை என் மடியில் சாய்த்து தலை கோதினேன் நான்//
ReplyDeleteகள்ளம்கபடமற்ற நட்பு.
//நெருங்கும் போது விலகும் காதல்.... விலகும் போது நெருங்குவதேன் !!!
விழியில் நீரை நிறைத்து நான் தேடும் போது ..........//
அதான் காதலோட முகமும்,குணமும்..இது கவிதை மாதிரியும் இருக்கு,சின்ன கதையும் மாதிரி இருக்கு.ரொம்ப ரொம்ப அழகா, அருமையா,ரசிக்கும்படியா,உணர்ப்பூர்வமாஇருக்கு.
என்னத்த சொல்ல? வார்த்தைகள தேடுறேன் .. கிடைச்சவுடன் ஓடியாந்து எழுதறேன்... இப்போதைக்கு வாழ்த்தறேன்......
ReplyDeleteதொலைந்த கவிதை திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசும்மாவா சொன்னாரு பாட்ஷா பாய், "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான்"னு
Miss...My jaws are still dropped down in WOW...!!! WOW ... i cant imagine someone had written something with similar background as i did... Long back... check it out...u will understand y i am saying Wow again and again ...!!!
ReplyDeletehttp://vigneshramana.blogspot.com/2008/10/blog-post.html
நல்லா இருக்குங்க, நட்பின் பகுதி
ReplyDelete//காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!//
ReplyDeleteகடைசியிலே சுடு காட்டிலே ரெண்டு பேருமா?
nice.
ReplyDeleteவார்த்தைக்கோர்வைகள், மிக அழகு. போனது மீண்டும் வந்தது மிக சந்தோஷம்.
ReplyDeleteGood one
ReplyDelete