Wednesday, November 4, 2009

எனக்குள் நீ

அவள் மெதுவாக கண் திறந்து பார்த்தாள், மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். உடல் வலித்தது மனம் ரணமாக இருந்தது.. இயலாமை கோவம் இரண்டும் சேர்ந்து அவளை பந்தாடியது. மெல்ல எழுந்து நடந்து வாஷ் பேசின் அருகே வந்தாள். ஒருவித ஒவ்வாமை வயிற்றை புரட்டியது. கண்ணாடியில் முகம் பார்த்தாள் உதடோரம் ரதம் பிசுபிசுத்தது. முகம் கன்றி இருந்தது. கண்கள் சிவந்து ஜீவன் இன்றி கெஞ்சின. அவள் முகத்தை பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. நேற்று நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன மீண்டும் ஒரு வித ஒவ்வாமை வாந்தி எடுத்தாள். நீரை வாரி முகத்தில் அறைந்தாள். மெல்ல நிமிர்ந்து கண்ணாடியை பார்த்து அதிர்ந்தாள் அங்கே அவன் பிம்பம். தலையை ஒரு பக்கமாக சாய்த்து அரிசி பற்கள் தெரிய மிதமான புன்னகை சிந்தி கண்களை சிமிட்டும் அவன் முகம். இவள் கண்களில் மீண்டும் நீர்கோலம். மெல்ல இவள் நினைவுகள் பினோக்கி சுழன்றது. நினைவுகளில் மெல்ல கரைந்தாள். அவன் இவள் தோழன் அனால் இவள் அவன் காதலி உயிரில் கலந்து உணர்வில் சேர்த்து நிதம் கொண்டாடும் காதலி . அவன் தொண்டைகுழி வரை எட்டி பார்த்த காதல் வார்த்தைகளை வாய் வரை கூட வரவிடாமல் தடுத்து விழுங்கி மனதிற்குள் தன் காதலை சாமாதி ஆகிவிடுவான். அவளை பார்ப்பதே போதும் என்ற உணர்வு அவனுக்கு. அவளோ இவன் தோழமையிலே கருப்பை குழந்தை போல பாதுகாப்பை உணர்ந்தாள். அவன் மேல் அளவு கடந்த அன்பு பாசம் அனால் அது காதலா என்றால் இல்லை என்பது தான் இவள் பதில். அவனுடன் பேசாமல் இவளால் இருக்க முடியாது அவனுடன் சண்டை பிடிக்காமல் இருக்க முடியாது. இது தெரிந்ததுனாலோ என்னமோ அவன் காதலை தன் மனதிற்குள்ள பூடிகொண்டான். இவர்களின் இந்த கண்ணாமூச்சி விளையாடும் ஒரு முடிவிற்கு வந்தது. இல்லை முடிவு அவனுக்கு வந்துவிட்டது. ஆமாம் ஆமாம் அவன் போயேவிட்டான் அந்த பேரிடி இவள் தலையில் ஒருநாள் இறங்கியது. ஊருக்கு போய்வந்து ஆர்வத்துடன் அவனை காண ஓடி சென்று பூட்டி கிடந்த அவன் வீட்டை பார்த்து ஏமாந்து பக்கத்து வீட்டில் விசாரித்த பொது தான் இந்த இடி இவள் தலையில் இறங்கியது " இப்போதான் வரியாமா , எங்க கண்ணு போயிருந்த நீ, அந்த அம்மா உன் பேரை சொல்லித்தான் புலம்பினாங்க.” இவளுக்கு ஒன்றும் விளங்காமல் பரபரத்து போனாள். கால்களுகடியில் பூமி நழுவுவது போல இருந்தது. அந்த அம்மா கூறிய வார்த்தைகளை இவள் காதுகள் ஏற்க மறுத்தன “அந்த புள்ள 10 நாலு முன்னாடி ஆக்சிடென்ட்லே செத்துபோய்.....” வாக்கியங்களை அந்த அம்மா முடிக்கும் முன்னே அவள் நிலைகுலைந்து போனாள். ஓங்கி பெருங்குரல் எடுத்து அழக்கூட திராணி இன்றி தவித்தாள் (தொடரும்................)

3 comments:

  1. கொஞ்சம் இடம் விட்டு பத்தி் பத்தியாக பிரித்து சொல்லலாமே!

    ReplyDelete
  2. நன்றி அருணா அடுத்த முறை நீங்க சொல்வது போல எழுதறேன்

    நன்றிகள் தமிழ்கிழவரே

    ReplyDelete