Monday, December 14, 2009

மீண்டும் ஒரு அர்த்தமுள்ள பாடல்




இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் . காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
இப்புவியில் எபோதும் இரண்டே பிரிவுகள் பணம் உள்ளவன் , பணம் இல்லாதவன் .... இந்த பாட்டு அந்த பாகுபாட்டை தெளிவாக கூறிகிறது .
வாழ்க்கை பந்தயத்தில் எபோதும் பணம் படைத்தவன் கையே ஓங்கி நிற்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.....

பாடல் இடம் பெற்ற படம் : பணம் பந்தியிலே
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
இசை : கே.வி. மகாதேவன் அவர்கள்
எழுதியவர் : க.மு. ஷேரிப்ப் அவர்கள்

பாடல்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
மனிதன் இல்லே பிழைக்கும் மனித இல்லே

ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே
அவனை உயர்த்தி பேச மனித கூடம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்தாலும் பணம் இல்லாத ஆளை
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காக தான்
பணம் பறந்து விட்டால் புகழ்ந்த கூடம் இகழும் உன்னை தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
இதை இனி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

உன்னால் உயர்த்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் நீயும் மதித்து அவரை துணிவுமே கொண்டு
நாளை முயன்று நீயும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

இப்போ சொல்லுங்க இந்த பாட்டு ரொம்ப எளிமையாவும் அதே சமயம் ஆழமாவும் இருக்கு இல்லையா..
உங்க கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
http://www.hummaa.com/music/album/13932/Panam+Panthiyile இங்கே சொடுக்கி இப்பாட்டை கேளுங்கள்

14 comments:

  1. //இப்புவியில் எபோதும் இரண்டே பிரிவுகள் பணம் உள்ளவன் , பணம் இல்லாதவன் ...//

    உண்மைதான் கல்ஸ்.
    ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பாட்டை கண்மூடி கேட்டேன்..ரொம்ப தேங்க்ஸ் !!

    ReplyDelete
  2. //உன்னால் உயர்த்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
    அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
    மண்ணாய் நீயும் மதித்து அவரை துணிவுமே கொண்டு
    நாளை முயன்று நீயும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
    //

    Super lines
    Keep going man!

    -MCE

    ReplyDelete
  3. ”இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் .” நானும் பகிர்ந்ததில் மகிழ்ந்தேன். தொடரட்டும் உம் பனி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உண்மைதான். இந்த உலகத்தில பணம்தான் எல்லாமாகி போச்சு.

    ReplyDelete
  5. அன்பின் அருமை தெரியாதவர்கள் தான் பணத்தின் அருமை பற்றி பெரிதாக எண்ணுவார்கள் .
    இது பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் "http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_4927.html "

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  6. //உன்னால் உயர்த்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
    அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
    மண்ணாய் நீயும் மதித்து அவரை துணிவுமே கொண்டு
    நாளை முயன்று நீயும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு//

    இதுதான் எவ்வளவு சத்தியமான வரிகள்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. இந்தக் காலத்திலேயும் கூட அர்த்தமுள்ள வரிகளுடன் பாட்டுக்கள் வருதுங்கோ . என்ன, அந்த வரிகள் கேக்க மாட்டேங்குது அவ்ளோ தான்! --கே.பி.ஜனா

    ReplyDelete
  8. கதிர் உனக்கு இந்த பட்டு பிடிக்கும்னு எனக்கு தெரியும் ....

    ReplyDelete
  9. ஜனார்த்தனன் இது அந்த கால பாட்டு !!!! இந்த மாதிரி பாட்டுகளை கேட்கணும் அது மட்டும் அல்லது சிறார்களையும் கேட்க வைக்கணும் அப்போதான் அவங்களுக்கு கொஞ்சம் நல்ல எண்ணம் உண்டாகும் .......... வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  10. மீன்துள்ளி செந்தில் நீங்க சொன்ன முகவரி எடுக்கவில்லை !!!

    ReplyDelete
  11. வந்தமைக்கும் தங்களின் மேன்மையான கருத்துக்களுக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  12. //ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காக தான்
    பணம் பறந்து விட்டால் புகழ்ந்த கூடம் இகழும் உன்னை தான்//

    அழகான வரிகள்.............

    நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........

    http://sangkavi.blogspot.com/

    ReplyDelete
  13. பழைய பாடல்களில்தான் எத்தனை அர்த்தங்கள்.அருமையான பாடல்.

    ReplyDelete
  14. ஐயோ, நான் தமாஷா சொன்னேனுங்க இந்தக் காலத்துப் பாட்டுக்களைப் பத்தி...

    ReplyDelete