Wednesday, December 23, 2009

காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!

காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!




நான் நடக்க உன் கைகளை நீட்டினாய் நீ

- காதலை கண்களில் தேக்கி

உற்சாகத்தோடு உன் விரல் பிடித்து நடந்தேன் நான்

- நட்பின் புன்னகை ஏந்தி

என் கண்களில் கண்ணீர் கண்டு துடைக்க விழைந்தாய் நீ

- காதலின் பரிதவிப்போடு

ஆதரவாய் உன் தோள் சாய்ந்து விசும்பினேன் நான்

-நட்பின் ஆறுதலோடு

வலியின் சாயலாம் சோகத்தை நெஞ்சில் தேக்கி நீ என்னை பார்க்க

- காதலின் கலவரத்தோடு

உன்னை என் மடியில் சாய்த்து தலை கோதினேன் நான்

- நட்பின் அரவணைப்போடு

நட்பின் விளிம்பை தாண்டிய நான் உன்னை தேடுகிறேன் என்றேன் !!!! நீயோ என் இமைகளை மூடச்செய்து நீல கடலின் ஆழத்தில் என்னை நிறுத்தி உன் நினைவு மழையினால் என்னை நினையச்செய்தாய் !!!

உன் கண்ணீர் முத்துக்களினால் முத்தாரம் சூட்டினாய் !!!!


நீ எங்கே என தேடி அலைந்து என் முன்னே வா என்றேன்

- காதலின் வலியோடு

காற்றிலே கலந்த நான் உன் சுவாசமாக இருக்கிறேன் என்றாய்

- காதலின் வெற்றி புன்சிரிப்போடு


நெருங்கும் போது விலகும் காதல்.... விலகும் போது நெருங்குவதேன் !!!


விழியில் நீரை நிறைத்து நான் தேடும் போது ..........


உன்னை மறைப்பதும் ஏன் ?????

Tuesday, December 22, 2009

நான் வருத்தமா இருக்கேன்



என்ன கோளாறுனு தெரியலை இந்நேரம் வரை  என் ப்ளாக் சரியாய் வேலை செய்யலை .... அதுதான் இந்த ஆய்வுப்பதிவு .... என்னோட நேற்றைய பதிவு தானா   டெலிட் ஆகிடுச்சு !!!! ரொம்ப வருத்தமா இருக்கு !!! இப்போ தானா எல்லாம் சரி ஆச்சு !!!! ஆனாலும் என்னோட ஒரு படைப்பு போனது ரொம்ப வருத்தமா இருக்கு :((((((((((((((((((((((((((((........

Monday, December 21, 2009

இது ஒரு கவிதையான விடுகதையின் கதை - விடை இங்கே !!!


ஒரு ஊரில் ஒரு புலவன் இருந்தானாம் அவன் தமிழ் பற்றுள்ளவன்... பற்றுதலின் காரணமாக தமிழில் மேன் மேலும் தேர்ச்சி பெற்றான் .... தேர்ச்சியின் விளைவாக தமிழ் அறிவில் நிகரற்ற நிலை பெற்றான் .... அந்த நிலையினால் புகழ் சேர்த்தது, புகழோடு சேர்ந்து செருக்கும் சேர்ந்தது, செருக்கின் விளைவாக ஆணவம் குடிகொண்டது அவனிடம் .... மற்றவரை மதியாமல் மிதித்தான் ...... இவன் இவாறு இருக்க ... இவனுடன் யாரும் பேசுவதில்லை இவன் ஆனவக்குனதால் கற்ற தமிழின் பெருமை மங்கியது ... அவன் இவாறு இருக்க .....................

ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்ட ஒரு உபாதையால் ஒரு மருத்துவரை நாடி சென்றான் !!!! மருத்துவர் ரொம்ப அமைதியானவர் !!! சாந்த சொரூபி !!! நிறைகுடம் !!!!! தனக்கு எல்லாம் தெரிந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்பவர் !!!! நம்ம புலவர் அங்கே வந்த சமயம் ஒரு சிலர் மிக அன்புடன் மருத்துவரிடம் வார்த்தையாடி கொண்டு இருந்தனர் .... புலவருக்கு பொறுக்கவில்லை... மருத்துவரின் உதவியாளரை செற்றே கடிந்து பணித்தார் ..... உதவியாளரோ உள்ளே சென்று, வெளியே வந்து மருத்துவரின் மொழியாடல் நொடிகளில் முடிந்துவிடுமாம் !!!!!!!!!! நீங்கள் சற்று பொறுமை காக வேண்டும் என்று பணிவுடன் கூறினான்... பொறுப்பாரா நம் புலவர் உடனே புயலென உள்ளே புகுந்தார் ....


இருக்கையில் அமர்ந்தார் !!!! மருத்துவர் அப்போதும் அமைதி காத்து !!! என்ன அவசரமோ ஐயா நீர் இப்படி புயலென துடித்து வர காரணம் தான் என்ன ???? என்று அமைதியே உருவாக வினவினார் !!!!

நம்ம புலவர் சும்மா இருப்பாரா !!! மருத்துவர் ஐயா அவசரம் தான் உயிர் போகும் அவஸ்தையும் கூட .
கேளுங்கள் .............

முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று

என்று புதிர் போட்டார் !!!!!

மருத்துவர் சிறிது சிந்தனைக்கு பின் சுற்றி உள்ளோரை ஒருமுறை பார்த்து சிரித்தார் ..... அவர்களோ ஒரு பெரிய கேள்வி குறியை முகத்தில் தேக்கி மருத்துவரை ஆவலோடு நோக்கினர் !!!!! சிறிது நகைப்புக்கு பின் மருத்துவர் புலவரை நோக்கி முறுவல் மாறாமல் !!!

ஆம் ஐயா தாங்க முடியா உயிர் கொல்லும் வலிதான் !!! கேளுங்கள் மருந்தை

பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்

என்றுரைத்து பெரிதாக நகைத்தார் !!!! புலவரின் முகத்திலோ ஈ ஆடவில்லை !!! மருத்துவரை வணங்கி பணிவாக அவ்விடத்தை விட்டு அகன்றார் !!!! அவர் செருக்கும் ஆணவமும் அவரை விட்டு அச்ச்சனமே அகன்றது !!!!

இப்போ நீங்க எனக்கு இவ்விரு பாடல்களின் அர்த்தத்தை சொல்ல வேண்டும் !!!!

இது எனக்கு என் தத்தா சொன்ன கதை !!!! உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் !!!!!!!!!!!!!


இந்த கதையை நான் தான் பின்னினேன் !!!! ஹி ஹி ஹி
இப்போ விடை

முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று


இரண்டு கால்கள் மற்றும் கைதடி சேர்ந்து மூன்று கால்கள்
மூவிரண்டு ( 6 வழி பாதை ) நடந்து போகும் போது
அக்காலின் கீழ் காலில் - அடி பாதத்தில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று - 5 தலை கொண்ட நெறிஞ்சி முள் குத்தியது

பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்

பத்துரதன் - தசரதன்
புத்திரனின் - தசரதனின் புத்திரன் ராமன்
மித்துருவின் - ராமனின் மித்துரு சுக்ரீவன்
சத்துருவின் - சுக்ரீவனின் சத்துரு வாலி
பத்தினியின் - வாலியின் பத்தினி தாரை -
காலை வாங்கி தேய் - தாரையின் காலை வாங்கினால் தரை ---
தரையில் தேய்க்க வேண்டும் என்பது பொருள்
ப்ளீஸ் யாரும் அடிக்க வராதீங்க !!!!!!!!

Wednesday, December 16, 2009

டிஆரின் கவிதைகள்








டிஆரின் கவிதைகள்

பல கேலிகளும் கிண்டல்களும் இருந்தாலும் நாம் ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம் டிஆரின் இசையும் பாடல் வரிகளும்........அவர் எழுதி இசை அமைத்த சில பாடல் வரிகள் மிக அற்புதமானவை...........என் மனம் கவர்ந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் தங்களின் மேன்மையான கருத்துகளையும் எதிர்நோக்குகிறேன்

படம் : மைதிலி என்னை காதலி
பாடல் : ஒரு பொன் மானை

தடாகத்தில் மீனொன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ


இதை விட பெண்ணின் கண்களுக்கு ஒரு அழகான உவமை சொல்லமுடியுமானு தெரியலை

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேர அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்


அழகுக்கு அழகு சேர்க்கும் வார்த்தைகள்...........

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
என்னை இழந்த பின்னும் எறிய துடிக்க என்னும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னை என்னும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்
சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன்


இந்த பாட்டு அதே படத்தில் நாளும் உந்தன் உறவைனு தொடங்கும் சோக பாடல் .... படத்தின் இறுதியில் இந்த பாடல் இடம் பெரும் ... இதுலே நம்ம டிஆர் கத்தி குத்து வாங்கி உடம்பெல்லாம் ரத்தத்தோட ஒரு சின்ன முதல் உதவி கூட இல்லாம சுமார் ஒரு ஐந்து நிமிஷம் பாடுவார் ( இது தனி காமெடி ) நம்ம கதாநாயகி ஒரு கண்ணாடி மாளிகை உள்ள பரத நாட்டியம் ஆடுவாங்க அதை வில்லன் ரசிப்பார்.....இப்போ பாட்டுக்கு வருவோம் ரொம்ப அருமையான வரிகள் உள்ள சோகத்தை அப்படியே காட்டும் விதமான ஒரு பாடல் ........ எஸ் .பி .பாலசுப்ரமணியம் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்..........


படம் - ரயில் பயணங்களில்
பாடல் - வசந்த காலங்கள்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா ...
அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஆடாதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

மீண்டும் பாருங்க என்னமாதிரி வார்த்தைகளை கொண்டு விளையாடி இருக்கார் மனுஷன் அப்பறம் இசை மனசோடு ஒட்டிக்கொள்ளும் ... ஜெயச்சந்திரன் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்

இது அதே படத்தில் வசந்தம் பாடின்னு துடங்கும் பாடல் !!!!இதை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் எவ்வளோ அழகாக வார்த்தைகள் பாருங்க.


ஒரு முறையே பார்க்க
அதில் உள்ளம் தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க

தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங் காவேரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு


இன்னும் நிறைய இருக்குங்க எழுத நேரம் இல்லை, ஆபீஸ்ல எவ்ளோதான் எழுத முடியும் சொல்லுங்க.... பாக்குறவங்க தப்ப நினைபாங்க இல்லை எதோ நாஞ்சில் பிரதாப் ப்ளாக் பார்த்து ஒரு வேகத்துலே எழுத துவங்கிட்டேன்.... ஏன்னா நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்கள் இவை..... அதனால இப்ப ஒரு கமா போடறேன்... சமயம் வரும் போது மீண்டும் எழுதுவேன் .........

















என்னவனும் நானும் என் மழையும்




இதை நான் கவிதைன்னு சொல்ல மாட்டேன் .....
எப்பவுமே என்னை மழையோடு சேரவிடாமல் பிரித்து, ஏன் என்ற என் கேள்விக்கு பதிலாய் அக்கறைன்னு கோடிட்டு காட்டி சிரித்த என்னவனை நானும் என் மழையும் சேர்ந்து தோற்கடித்தால் எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்... அப்படியே எழுத்தாகிட்டேன்.............



முதல் துளி மண்ணை தொட
இரண்டாம் துளியை பிடிக்க நான் கையேந்தி வரைந்தேன்
அத்துளியோ என்னை பார்த்து கண் சிமிட்டி
என் கணங்களில் கலக்க
தொடர்ந்து விரைந்த பல துளிகள்
என்னோடு உறவாட
நானும் எனை மறந்து காற்று குதிரை ஏறி
என் கார்குழல் பரக்க மழையோடு மோதினேன்
தோற்ற நான் துவண்டு அழ
தேற்ற என்னோடு சேர்ந்து அழுதது என் மழை
எங்கள் இருவரையும் பிரிக்க அங்கே வந்த
என்னவனின் குடையை ஒரே பாய்ச்சலில் தட்டிவிட்டது
என் காற்று குதிரை ........ என்னவனின் வாடிய முகத்தை
பார்த்து என்னோடு சேர்ந்து சிரித்தது என் மழை ..............

Tuesday, December 15, 2009

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு



மீண்டும் ஒரு திரைப்பாடல் அர்த்தமுள்ள ஆழமான பாடல் !!! அருமையான வரிகள் " சமரசம் உலாவும் இடமே " இந்த பூமியில் வாழும் போது எத்தனை செருக்குடன் இருந்தாலும் நாம் அனைவரும் சமம் என்பதை எடுத்துறைகிறது இந்த பாட்டு........... இந்த பாட்டை நான் எதனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணுவது கடினம் தான் ..... நான் மிகவும் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று ..... உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்

திரைப்படம் : ரம்பையின் காதல்
திரை இசை : T.R. பாபா அவர்கள்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பாடல் ஆசிரியர் : மருதகாசி அவர்கள்

பாடல்

சமரசம்ம்ம்.....
உலாவும் இடமே ....
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோறேன்றும்
தாழ்ந்தவர் தீயோறேன்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே
அரசனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே

சேவை செய் தியாகி
சிங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை
நாடிடும் யோகி
எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே

http://www.hummaa.com/music/album/Rambaiyin%20Kaathal/14081
இங்கே சொடுக்கி பாட்டை கேட்கலாம்

Monday, December 14, 2009

நீ எனக்காக !!!


நான்
என் இமை மூடி உன் தோள் மீது தலைசாயும் போது

எதோ ஒரு சங்கீதம் கேட்கிறது உன் சின்ன சிரிப்பில்
காதலின் சுவடுகள் இதுதானோ
நீ இருக்கும் பிரதி நிமிடமும் என் வானில் பூ மழை
உன்னோடு வாழ்ந்தால் கஷ்டங்களும் இஷ்டங்களே
உன்னோடு வாழ்ந்தால் வார்த்தைகள் கூட கவிதையாகி போகும்
உன்னோடு வாழ்ந்தால் நிஜமாகும் சுவர்க்கம்
நீ என் சுவாசத்தின் ஆதாரம்
நீ என் புன்னகையின் வண்ணம்
நீ என் எண்ணகளின் மின்னல்
நீ என் கண்களின் ஒளி
நீ என் இதயத்தின் துடிப்பு
என் வாழ்நாள் முழுதும் பார்க்கவேண்டும் உன் புன்னகை
இந்த சந்தோசம் நிலைக்க வேண்டும் என் நினைவுகளில்

மீண்டும் ஒரு அர்த்தமுள்ள பாடல்




இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் . காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
இப்புவியில் எபோதும் இரண்டே பிரிவுகள் பணம் உள்ளவன் , பணம் இல்லாதவன் .... இந்த பாட்டு அந்த பாகுபாட்டை தெளிவாக கூறிகிறது .
வாழ்க்கை பந்தயத்தில் எபோதும் பணம் படைத்தவன் கையே ஓங்கி நிற்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.....

பாடல் இடம் பெற்ற படம் : பணம் பந்தியிலே
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
இசை : கே.வி. மகாதேவன் அவர்கள்
எழுதியவர் : க.மு. ஷேரிப்ப் அவர்கள்

பாடல்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
மனிதன் இல்லே பிழைக்கும் மனித இல்லே

ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே
அவனை உயர்த்தி பேச மனித கூடம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்தாலும் பணம் இல்லாத ஆளை
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காக தான்
பணம் பறந்து விட்டால் புகழ்ந்த கூடம் இகழும் உன்னை தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
இதை இனி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

உன்னால் உயர்த்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் நீயும் மதித்து அவரை துணிவுமே கொண்டு
நாளை முயன்று நீயும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

இப்போ சொல்லுங்க இந்த பாட்டு ரொம்ப எளிமையாவும் அதே சமயம் ஆழமாவும் இருக்கு இல்லையா..
உங்க கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
http://www.hummaa.com/music/album/13932/Panam+Panthiyile இங்கே சொடுக்கி இப்பாட்டை கேளுங்கள்

Thursday, December 10, 2009

பா படத்தை தமிழில் ரீமேக் பண்றாங்க

ஹிந்தியில் வெளிவந்த பா படத்தை தமிழில் ரீமேக பன்றாங்கோ !!!!

படம் பேரு நைனா !!!!!!!!!








Wednesday, December 9, 2009

பாடல் - உதவி வேண்டும் - ப்ளீஸ்




நேற்று எனது கணினியை குடைந்து கொண்டு இருந்தேன் ... தற்செயலாக இந்த பாட்டை கேட்க நேர்ந்தது .... சொன்னால் நம்ப மறுப்பீர்கள் .... இந்த பாட்டை ஒரு முப்பது முறை கேட்டு இருப்பேன் ...

யாரவது இந்த பாடல் இடம் பெற்ற படம் மற்றும் எழுதியவரை பற்றி சொல்லுங்களேன்...... இணையத்தை அலசிட்டேன் என் மண்டைக்குள்ள நண்டு பிராண்டுது .......ப்ளீஸ் .............. பாருங்க பாருங்க மண்டை மேலே எவ்ளோ பெரிய நண்டுடுடுடுடு ......................................



பாடல்

மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்றென்னும் நிலை வேண்டும்
இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்

கண்ணான கணவன் தன்மானம் தன்னை காப்பாற்றும் பெண் தெய்வம்
மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரை காண பொருக்கதடா தெய்வம்

அழியாத செல்வம் புவியோர்கள் ஏன் பணம் காசிலே இல்லை
மெய் அன்பே எந்நாளும் அழியாத செல்வம் அதை நீயும் மறவாதே

எண்ணாத துன்பம் எது வந்த போதும் எதிர்கொள்ள தயங்காதே
இந்த எளியோருக்காக நீ செய்த தாகம் அதை லோகம் மறவாதே ....
நீங்களே சொல்லுங்க இந்த பாட்டை முப்பது வாடி கேட்டதில் தப்பு இல்லை தானே... எத்தனை உண்மையான வரிகள்...........

Tuesday, December 8, 2009

புல்


என்னவனே !!

நேற்று நீ நின்றிந்த கால்தடத்தில் இடது புல் ஒன்றை எடுத்து
என் வீட்டில் பதியமிட்டேன்;

இன்று அதன் வேரருகே ஒரு குட்டி புல்

கண் சிமிட்டும் நேரத்தில் என் வீடு முழுவதும் புற்கள்

பச்சை பசேலென என் மனத்தோட்டம் முழுக்க

உன் நினைவு பூக்கள் மலர்கிறது;
என் சுவாசத்தில் பூ வாசம் நிறைகிறது .........................

தோழமையே !!!!!!!!!!!!!!!!!!!!

இது என் தோழனின் படைப்பு !!! உங்களோடு பகிர்கிறேன்

காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்

பாதையில் வரும்
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை

எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என

ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….

சாம்பு........