Saturday, March 13, 2010

என்றும் கண்ணீருடன் நான் மேகலா ...............எங்கும் இருட்டு …………..ஒரு வெள்ளை புள்ளி ... புள்ளி குறுகியது ......... என் உடலை குறுக்கி புள்ளிக்குள் நுழைகிறேன் ...... வெள்ளை புள்ளி வாசலை அடைத்தது ... புள்ளியை விட்டு வெளியே வர முடியவில்லை ..... அங்கேயும் இருட்டு ..... மேலும் என் உடலை குறுக்கி அங்கேயே முடங்கினேன்..... நான் கண்களை மூடினேன்….. வீர் என்று ஒரு சப்தம் ..... என் கண்களை திறக்க இமைகள் ஒத்துழைக்கவில்லை ...... வலுக்க இமைகளை திறந்தேன் ..... என் வீட்டின் நாற்காலியில் அமர்ந்திருந்தேன் .... மணி நான்கு ..... நேற்று இரவு பத்து மணிக்கு இந்த நாற்காலியில் தூக்கம் இல்லாமல் அமர்ந்த நினைவு சுட்டது ...... உடலின் வலியை விட மனதின் வலி மிகுதியாய் இருந்தது ...... கண்களை மீண்டும் மூடினேன் .... மனதில் ஒரு குரல் .... " மேகலா என்ன ஆச்சு ஏன்டா செல்லம் இப்படி .... இரவு முழுதும் இப்படியா இருந்தாய் உனக்கு புத்தி பிசகிவிட்டதா.... இப்படி வா என் மடியில் படு .... என் கண்ணே " .... என் விழியோரம் நீர் கசிந்தது ..... மெல்ல படுக்கை அறையை திறந்தேன் அங்கே ராகவன் சலனமில்லாமல் உறங்கிகொண்டிருந்தான் ........

என் கண்களில் நீர் கோலம் .... மெல்ல வெளியே வந்தேன் மீண்டும் என் உலகில் பயணித்து விடை தெரியா வினைகளை துரத்தினேன் ...... என்னால் ஏன்   இவ்வாழ்க்கையை சுகித்துகொள்ள முடியவில்லை ஏன் காயபடுகிறேன் .... எதை தேடுகிறேன் ..... ஒருவேளை ராகவன் வாங்கி கொடுத்த பட்டுபுடவையில் லயித்திருந்தால் சந்தோசம் பொங்கி இருக்குமோ ? அவன் வங்கிய வளையல்களை அணித்து அக்கம் பக்கத்தில் பெருமை பேசி இருந்தால் மகிழ்ச்சி விண்ணை எட்டி இருக்குமோ ?.. இவை எல்லாம் கொடுத்து ராகவன் என் உடலில் மையம் கொண்ட பொது நான் பூரித்திருந்தால் என் வாழ்வு வளமாய் இருக்குமோ ???
 பொருள் தேடும் உலகில் நான் அருள் தேடியது பாவமோ ? உடல் தேடும் உலகில் நான் உண்மை அன்பை தேடியது பேதமையோ ?? .... நான் செய்த பாவம் என்ன ???? என்னால் முடியவில்லை ...... என் இரவுகளின் சுமை என் தலையணிகளின் ஈரம் சொல்லும்....நான் தோற்க மாட்டேன் ... வீழ மாட்டேன் .... என் மீது தவறில்லை .... ராகவா நீ என்னை ஏமாற்றி விட்டாய் .... " நான் அன்பிற்கு ஏங்கும அனாதை ஜீவன்" .... உன் கண்களில் அன்பின் ஒளியை கண்டேன் என்று கூறி ஏனடா என் பாறை மனதை பிளந்தாய் .... உன் வரையில் அன்பென்றால் உன் துணிகளை துவைபதா ? உனக்கு உணவு தயாரிப்பதா ? பரிமாறுவதா ? உன் பொருளாதார சுமையை பங்குபோடுவதா ? நீ விலை கொடுத்து வாங்கி தரும் பொருள்களுக்கு விலையாய் நான் என் உடலை தருவதா ? புரியவில்லை வீடு வாங்குவதும் வாகனம் வாங்குவதும் பொருள் சேர்ப்பதும் காதலா ? அன்பா ? .....

என் கண்களில் நீர்கோலம் நிற்கவில்லை ...... ராகவா நான் உன்னை விட்டு விலக போவதில்லை .... என் நாவால் உன்னுடன் மொழியாடுவேன் .... என் உடலால் உன்னுடன் உறவாடுவேன்…………………. ஆனால் ............... என் விழியால் உன்னுடன் காதல் பேச மாட்டேன் .... மனதால் உன்னை விட்டு பல நூறு யுகங்கள்  கடந்து நிற்பேன் ........ என் நெஞ்சில் நீ விதைத்த சூனியம் உன்னை ஒரு நாள் ஆட்கொள்ளும் .... உன்னை கொல்லும்....

என்றும் கண்ணீருடன் நான் மேகலா ...............


"இதை எழுதிய பின் என் மனமும் சற்று கனத்தே இருந்தது  இல்லை முழுவதுமாக மரத்து இருந்தது .... இதற்கு காரணம் நேற்று என் தோழியை நான் வெகு காலங்களுக்கு பிறகு சந்தித்தது ........ என் வேலை பளுவின் காரணமாக வெகு காலம் எழுத முடியவில்லை .... தவிரவும் இக்கதையை நான் முன்னமே எழுதிவிட்டிருந்தேன் ..... அனால் பகிர மனமில்லாமல்  இருந்தது இக்கதைக்கு முடிவில்லதமையால்.... நேற்று என் கணினியை திறந்தவுடன் ஒரு உந்துதல் அவளிடம் பேசியதாலோ என்னவோ .... நான் முடித்த விதம் சரியா என்றும் தெரியவில்லை ...... என் மனமும் குழம்பித்தான் போனது ....இதோ எழுதி விட்டேன் ...... இந்த குறிப்பை ஸ்ரீநியின் கருத்தை பார்த்த பின்பு எழுதவேண்டும் என்று தோன்றியது ...."

11 comments:

 1. இதை ஒரு முறை படித்த பின் மறுமொழி எழுதும் தைரியம் தொலைத்து விட்டு எங்கோ போய் விட்டேன் என்னமோ பண்ணுது.

  ரொம்ப கனமா இருக்கீங்க .. ஒன்னே ஒன்னு "அமைதியா இருங்க"

  நீங்கள் சொல்லும் நிலையில் நல்லதை தவிர வேறு எதுவும் நடக்க வைப்பே இல்லை
  பகிர்வுக்காய் காத்திருகிறேன் - vikky66@gmail.com

  ReplyDelete
 2. இவ்வளவு சோகம் வேண்டாமே....

  ReplyDelete
 3. ரொம்ப நாள் கழிச்சு எழுதி இருக்கீங்க - சோக மழையில் நனைந்து. ...............!

  ReplyDelete
 4. நெஞ்சு வலிக்குது

  ReplyDelete
 5. நீங்கள் சொல்வது சரிதான் தோழி மேகலாவின் வாழ்விலும் இவ்வளவு சோகம் வேண்டியதில்லைதான்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 6. Chitra வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 7. சைவகொத்துப்பரோட்டா ... என் மனதில் மேகலா ஏற்றிய பாரத்தை அப்படியே வார்த்தைகளாய் வடித்துவிட்டேன் !!! மன்னிக்கவும்

  ReplyDelete
 8. தங்களின் புரிதலுக்கு என் நன்றிகள் யாதவன்

  ReplyDelete
 9. நி வருகைக்கும் பகிர்வுக்கும் தங்களின் புரிதலுக்கும் என் நன்றிகள் ... உங்கள் வார்த்தைகள் மேகலாவிற்கு கட்டாயம் ஆறுதல் அளிக்கும்

  ReplyDelete
 10. ஆரம்பித்தவிதம் நன்றாக இருந்தது. மனதிற்குள் சென்று எழுத முயற்சிக்கிறீர்கள்.எல்லோருக்கும் எளிதாக வராத ஒன்று.தொடருங்கள்....

  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete