அனைவருக்கும் வணக்கம் !!!!
நான் வந்துட்டேன் !!!!
ஹ ஹ ஹ !!! " I am Back "
நான் புது மடிக்கணினி வாங்கிட்டேன் !!!
இதை கவிதைனு சொல்லமுடியலை !!!
சும்மா அப்படியே கோர்வையா வந்தது எழுதிட்டேன்
நீங்க படிச்சு பார்த்து நிறை குறைகளை சொல்லுங்களேன்
நீ
" நான் உனக்கு யார் " என்று ஒற்றைவரியில் என்னை கேட்டுவிட்டாய் நீ !!!
என்னை நானே கேட்டுகொள்கிறேன் " நீ யார் எனக்கு "
எனக்கு கிடைத்த பதில்கள் உனக்கு உணர்த்துமா நீ எனக்கு
யாரென்று ?????
என் உற்றமும் நீ
என் சுற்றமும் நீ
என் அகமும் நீ
என் புறமும் நீ
என் உறக்கமும் நீ
என் வழிப்பும் நீ
என் நிஜமும் நீ
என் நிழலும் நீ
என் யுத்தங்களும் நீ
என் படைகளும் நீ
என் சத்ருவும் நீ
என் தோல்வியும் நீ
என் வெட்கமும் நீ
என் தாகமும் நீ
என் பிரியமும் நீ
என் கோபமும் நீ
என் நியாயமும் நீ
என் அநியாயமும் நீ
என் கோரிக்கையும் நீ
என் நிராகரிப்பும் நீ
என் நினைவும் நீ
என் மறதியும் நீ
என் இஷ்டமும் நீ
என் கஷ்டமும் நீ
என் பந்தமும் நீ
என் சொந்தமும் நீ
என் ஆதியும் நீ
என் அந்தமும் நீ
என் மரணமும் நீ
என் ஜனனமும் நீ
Friday, January 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க . வாழ்த்துக்கள். புது கணினி வாங்குனதுக்கும், திரும்ப வந்ததுக்கும்.. பட்டய கெளப்புங்க....
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteபுதுக்கணினியில் பொங்கி வழியட்டும் படைப்புகள்! வாழ்த்துக்கள்:)!
கவிதை சூப்பர் .. புது கணினி புது ஸ்டைல் கவிதை .. கலக்குறீங்க
ReplyDelete:)
ReplyDeleteமடிகணினி, உங்களை மறுபடியும் எங்கள் உலகுக்கு அழைத்து வந்து விட்டது. வாருங்கள்! வாழ்த்துக்கள்! இனி நம் காட்டில் "மழை"தான்.
ReplyDeleteநகர்த்திறீங்க.
ReplyDeleteபிடிச்சிருக்கு உங்கள் கவிதை.
அதுதான் பாரதி சொல்லிட்டரு இல்ல யதுமாஹி நின்றாய் தேவி எங்கும் நீ நிறைந்தாய் ....இருந்தாலும் உங்க ஸ்டைலும் நல்லா தான் இருக்கு
ReplyDeleteவருகை தந்த அணைத்து அன்புள்ளங்களுக்கும் என் வணக்கங்கள் !!!! தங்கள் கருத்துக்களுக்கு என் நன்றிகள் !!!!
ReplyDeleteஎனக்காக தீட்டிய சொற்கள், என் நெஞ்சை பதம் பார்த்த சொற்கள். என்னவளை புரிய வைத்த சொற்கள், கடந்து ருசித்து கனத்த சொற்கள்.
ReplyDelete