Sunday, March 14, 2010
பொன்னை விரும்பும் பூமி.....
இந்த பாட்டிற்கும் எனக்கும் பெரும் பொருத்தம் உண்டு .... என் மனதை ஒத்த பாடல் வரிகள் ............... நினைவுகளை வருடும் இசை ... மதி மயக்கும் குரல் ..... இப்பாடலை கேட்டால் கால நேரம் போவதே தெரியாது ....
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவர் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும்
என்றும் வேண்டும் என்னுயிரே
ஆல மரத்தின் விழுதினைப் போலே
அனைத்து நீயும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
நீங்களும் உங்க கருத்துக்களை சொல்லுங்க
படலை கேட்க்க இங்கே சொடுக்குங்கள் - http://www.hummaa.com/music/song/Ponnai+Virumbum/38019
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பாடல்தான், அதுவும் காட்சியுடன் பார்க்குபோது மனதை வருடும்.
ReplyDeleteMeaningful song. :-)
ReplyDeleteஅருமையான பாடல் பகிர்வு...
ReplyDelete//வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே//
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...
-
DREAMER
நல்ல பாடல், தூங்கப்போறதுக்கு முன்னாடி இந்த பாட்டு கேட்டா, மனசு அவ்ளோ ரிலாக்ஸ் ஆகும் :)
ReplyDelete