என்னுள் மழை பெய்தது
நினைவு கொடை கொண்டு சிலவற்றை தடுத்தேன்
அனால் என் மேல் சாரல்கள் விழுவதை தடுக்க முடியவில்லை
என் விருப்பம் என்பதும் விதிவசம்
என் நம்பிக்கை என்பதும் விதிவசம்
இதிலே எதிர்பார்ப்பு என்பதற்கு வழியே இல்லை
இங்கே உதடுகளை சாயம் தான் அலங்கரிக்கிறது - உண்மை அல்ல
நெஞ்சங்களை பொய் தான் அலங்கரிக்கிறது - நேர்மை அல்ல
மழையின் சிறு சிறு துளிகளை போல் என்னுள் தான் எத்தனை நினைவுகள்
ஒருவேளை நான் நிலைத்திருப்பது இதன் வாயிலாகதானோ !!!!!

//இங்கே உதடுகளை சாயம் தான் அலங்கரிக்கிறது - உண்மை அல்ல
ReplyDeleteநெஞ்சங்களை பொய் தான் அலங்கரிக்கிறது - நேர்மை அல்ல//
பொத்தாம் பொதுவாக இப்படி குறை சொல்பவர்களிடம் நான் கேட்க்கும் ஒரே கேள்வி... இது உங்களுக்கும் பொருந்துமா?
வருகைக்கும் கேள்விக்கும் நன்றி suryajeeva
ReplyDeleteஆம் பல சமயம் என் உதடு வரை வந்த உண்மைகளை சூழ்நிலை கைதியாய் விழுங்கி சாயம் பூசி மறைத்திருக்கிறேன் .... நான் விழுங்கிய உண்மை என் ஈசன் கண்டத்தில் நின்ற விஷம் போல என் தொண்டை குழிக்குள் நின்று இன்றும் கசக்கிறது இதனால் என் உள்ளத்தின் நேர்மை கன்றி முகம் சிவக்க நான் துடித்த நாட்களும் உண்டு
மேலும் இந்த வரிகள் பொதுவாக பலருக்கும் பொருந்தியது என் அனுபவத்தில் அதன் அடிப்படையில் தான் எழுதினேன் .... தவறோ சூர்யஜீவன் ?????
சாயம் பூசி மறைத்த உதடுகள் இன்று உண்மை பேசுகின்றனவே...
ReplyDeleteநீங்கள் சொல்வது எங்கோ ஒரு பத்து பதினைந்து சதவிகிதம் மட்டுமே..
மீதி சதவிகித மக்கள் நேர்மையாக வாழ்க்கை நடத்த முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...
நம் மக்கள் மீது நம்பிக்கை வைத்து பார்த்தால், எத்தனை பேர் எவ்வளவு கஷ்டத்திலும் நேர்மையாக வாழ துடித்துக் கொண்டிருப்பது தெரியும்..