நான்
என் இமை மூடி உன் தோள் மீது தலைசாயும் போது
என் இமை மூடி உன் தோள் மீது தலைசாயும் போது
எதோ ஒரு சங்கீதம் கேட்கிறது உன் சின்ன சிரிப்பில்
காதலின் சுவடுகள் இதுதானோ
நீ இருக்கும் பிரதி நிமிடமும் என் வானில் பூ மழை
உன்னோடு வாழ்ந்தால் கஷ்டங்களும் இஷ்டங்களே
உன்னோடு வாழ்ந்தால் வார்த்தைகள் கூட கவிதையாகி போகும்
உன்னோடு வாழ்ந்தால் நிஜமாகும் சுவர்க்கம்
நீ என் சுவாசத்தின் ஆதாரம்
நீ என் புன்னகையின் வண்ணம்
நீ என் எண்ணகளின் மின்னல்
நீ என் கண்களின் ஒளி
நீ என் இதயத்தின் துடிப்பு
என் வாழ்நாள் முழுதும் பார்க்கவேண்டும் உன் புன்னகை
இந்த சந்தோசம் நிலைக்க வேண்டும் என் நினைவுகளில்
காதலின் சுவடுகள் இதுதானோ
நீ இருக்கும் பிரதி நிமிடமும் என் வானில் பூ மழை
உன்னோடு வாழ்ந்தால் கஷ்டங்களும் இஷ்டங்களே
உன்னோடு வாழ்ந்தால் வார்த்தைகள் கூட கவிதையாகி போகும்
உன்னோடு வாழ்ந்தால் நிஜமாகும் சுவர்க்கம்
நீ என் சுவாசத்தின் ஆதாரம்
நீ என் புன்னகையின் வண்ணம்
நீ என் எண்ணகளின் மின்னல்
நீ என் கண்களின் ஒளி
நீ என் இதயத்தின் துடிப்பு
என் வாழ்நாள் முழுதும் பார்க்கவேண்டும் உன் புன்னகை
இந்த சந்தோசம் நிலைக்க வேண்டும் என் நினைவுகளில்
:-)))))
ReplyDeleteஉன்னோடு வாழ்ந்தால் கஷ்டங்களும் இஷ்டங்களே
ReplyDeleteஉன்னோடு வாழ்ந்தால் வார்த்தைகள் கூட கவிதையாகி போகும்” இப்படி வாழத்தான் எல்லாருக்கும் ஆசை. ம்ம் எல்லால் ஆண்டவன் கையில இருக்கு..
இப்படி வாழத்தான் எல்லாருக்கும் ஆசை. ம்ம் எல்லால் ஆண்டவன் கையில இருக்கு..
ReplyDeleteஅண்ணாமலையான் ஏன் இப்படி பேசறீங்க!!!!!!!!!! நம்ம வாழ்கை நம்ம கையில் தான் இருக்கு !!! தெளிவான சிந்தையும் தூய எண்ணமும் ஆழமான காதலும் தன்னலமில்லா அன்பும் உள்ள வாழ்க்கை இப்படிதான் இருக்கும் !!!!!!!!!! உங்க வாழ்கை அன்பும் பண்பும் நிரம்ப இருக்கணும்னு நான் ஆண்டவனை வேண்டுகிறேன் !!!!!!!!
மொத்த கவிதையும் ஏதோ ஒன்றை சொல்லவருகிறது அந்த காதலனுக்கு..வேண்டுதல் என்பது காதலில் முக்கியம்,இந்த கவிதையை போல..
ReplyDeleteபடம் ரொம்ப அழகு.
நல்லா எழுதியிருக்க கல்ஸ்.
நம் வாழ்க்கை நம் கையில் என்றபோதும்
ReplyDeleteஆண்டனின் பார்வை அதன் மீது விழுந்தால் மேன்மையிலும் மேன்மையாகிப்போகும் என்பது என் கருத்து தோழி..
கவிதை மொத்தமும் அழகு
//என் இமை மூடி உன் தோள் மீது தலைசாயும் போது
ReplyDeleteஎதோ ஒரு சங்கீதம் கேட்கிறது உன் சின்ன சிரிப்பில்
காதலின் சுவடுகள் இதுதானோ
நீ இருக்கும் பிரதி நிமிடமும் என் வானில் பூ மழை//
ரொம்ப நல்லா இருக்குங்க.
யப்பா சாமி! கவிதை எழுதுறது எவ்வளவு கஷ்டம்ன்னு இதை படிக்கும்போதுதான்யா தெரியுது!!
ReplyDeleteகாதலின் வேண்டுதல்.அடிமனதின் ஏக்கங்கள் கவிவரிகளாக.அருமை தோழி.
ReplyDeleteமனதை தொடும் கவிதை. (ஏதோ ஒரு சங்கீதம் , எண்ணங்களின் மின்னல்... அப்படித்தானே?)
ReplyDeleteஅருமையான கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteரேகா ராகவன்.
நல்ல கவிதை சங்கீதமாவே இருக்கு...
ReplyDeleteஹா ஹா ஹா ஆழி நானும் ஆண்டவனத்தான் நம்பறேன். நீங்களும் அதையேத்தான் சொல்றீங்க..?!!
ReplyDeleteரொம்ப நன்றி கதிர் ....
ReplyDeleteநன்றிகள் வசந்த்
ReplyDeleteநன்றிகள் ரேகா ராகவன்.
ReplyDeleteஆமாம் ஜனா என் இதயத்தின் வரிகள் இவை !!!! தங்கள் ரசனைக்கு என் நன்றிகள்
ReplyDeleteநன்றிகள் ஹேமா
ReplyDeleteநன்றிகள் கலையரசன் ... நீங்க இப்படி சொல்லலாமா !!!!உங்க எழுத்துகளுக்கு முன்னால இது ஒன்னும் இல்லை
ReplyDelete...... இது என் மனசுல ஓடின வர்ர்தைகளின் கோர்வை அவ்ளோதான் இதை கவிதையா நினைச்சு நான் எழுதலை ........
நன்றிகள் கல்யாணி சுரேஷ்
ReplyDeleteநீங்க சொல்றது சரிதான் மல்லிகா நம்ம எண்ணங்கள் நல்லதா இருந்த அந்த ஆண்டவன் நம்ம கூடயே இருபர்ந்கறது ஏன் தாழ்மையான கருத்து ..... ஆண்டவன் துணை நமக்கு வேணும் இது அணித்தரமான உண்மை... அதுக்கு முன்னாடி அந்த உன்னதமான துணை நிலைக்கு நாம நம்மள தகுதியா வச்சு இருக்கனும் .....
ReplyDeleteஉங்க கருத்து 100 % உண்மை !!! எனது நன்றிகள்
மேடம், நான் குறிப்பிட்டது அச்சுப் பிழையை. ('ஏதோ', 'எண்ணங்களின்') உங்கள் பதிலும் பொருத்தமே. நன்றி.
ReplyDeleteஇழுத்து வந்தன் விழிகள் என்றாலும்
ReplyDeleteஇழுத்துக் கட்டும் உன் வரிகள்
//எதோ ஒரு சங்கீதம் //
ReplyDeleteஏதோ.
கவிதைக்கான படத்தேர்வு மிக அருமை.