Wednesday, December 7, 2011

சாரல்கள்

என்னுள் மழை பெய்தது
நினைவு கொடை கொண்டு சிலவற்றை தடுத்தேன்
அனால் என் மேல் சாரல்கள் விழுவதை தடுக்க முடியவில்லை
என் விருப்பம் என்பதும் விதிவசம்
என் நம்பிக்கை என்பதும்  விதிவசம்
இதிலே எதிர்பார்ப்பு என்பதற்கு வழியே இல்லை
இங்கே உதடுகளை சாயம் தான் அலங்கரிக்கிறது  - உண்மை அல்ல
நெஞ்சங்களை பொய் தான் அலங்கரிக்கிறது - நேர்மை அல்ல
மழையின் சிறு சிறு துளிகளை போல் என்னுள் தான் எத்தனை நினைவுகள்
ஒருவேளை நான் நிலைத்திருப்பது இதன் வாயிலாகதானோ !!!!!

Wednesday, March 17, 2010

என் மின் அஞ்சலுக்கு வந்த மினி மொக்கை

என் மின் அஞ்சலுக்கு வந்த மினி மொக்கை.....படித்துவிட்டு நான் சிரித்தேன் நீங்களும் சிரியுங்கள் !!!!

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !

அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........

Next மீட் பண்றேன்...

Sunday, March 14, 2010

பொன்னை விரும்பும் பூமி.....இந்த பாட்டிற்கும் எனக்கும் பெரும் பொருத்தம் உண்டு .... என் மனதை ஒத்த பாடல் வரிகள் ............... நினைவுகளை வருடும் இசை ... மதி மயக்கும் குரல் ..... இப்பாடலை கேட்டால் கால நேரம் போவதே தெரியாது ....

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவர் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும்
என்றும் வேண்டும் என்னுயிரே

ஆல மரத்தின் விழுதினைப் போலே
அனைத்து நீயும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

நீங்களும் உங்க கருத்துக்களை சொல்லுங்க

படலை கேட்க்க இங்கே சொடுக்குங்கள் - http://www.hummaa.com/music/song/Ponnai+Virumbum/38019

Saturday, March 13, 2010

என்றும் கண்ணீருடன் நான் மேகலா ...............எங்கும் இருட்டு …………..ஒரு வெள்ளை புள்ளி ... புள்ளி குறுகியது ......... என் உடலை குறுக்கி புள்ளிக்குள் நுழைகிறேன் ...... வெள்ளை புள்ளி வாசலை அடைத்தது ... புள்ளியை விட்டு வெளியே வர முடியவில்லை ..... அங்கேயும் இருட்டு ..... மேலும் என் உடலை குறுக்கி அங்கேயே முடங்கினேன்..... நான் கண்களை மூடினேன்….. வீர் என்று ஒரு சப்தம் ..... என் கண்களை திறக்க இமைகள் ஒத்துழைக்கவில்லை ...... வலுக்க இமைகளை திறந்தேன் ..... என் வீட்டின் நாற்காலியில் அமர்ந்திருந்தேன் .... மணி நான்கு ..... நேற்று இரவு பத்து மணிக்கு இந்த நாற்காலியில் தூக்கம் இல்லாமல் அமர்ந்த நினைவு சுட்டது ...... உடலின் வலியை விட மனதின் வலி மிகுதியாய் இருந்தது ...... கண்களை மீண்டும் மூடினேன் .... மனதில் ஒரு குரல் .... " மேகலா என்ன ஆச்சு ஏன்டா செல்லம் இப்படி .... இரவு முழுதும் இப்படியா இருந்தாய் உனக்கு புத்தி பிசகிவிட்டதா.... இப்படி வா என் மடியில் படு .... என் கண்ணே " .... என் விழியோரம் நீர் கசிந்தது ..... மெல்ல படுக்கை அறையை திறந்தேன் அங்கே ராகவன் சலனமில்லாமல் உறங்கிகொண்டிருந்தான் ........

என் கண்களில் நீர் கோலம் .... மெல்ல வெளியே வந்தேன் மீண்டும் என் உலகில் பயணித்து விடை தெரியா வினைகளை துரத்தினேன் ...... என்னால் ஏன்   இவ்வாழ்க்கையை சுகித்துகொள்ள முடியவில்லை ஏன் காயபடுகிறேன் .... எதை தேடுகிறேன் ..... ஒருவேளை ராகவன் வாங்கி கொடுத்த பட்டுபுடவையில் லயித்திருந்தால் சந்தோசம் பொங்கி இருக்குமோ ? அவன் வங்கிய வளையல்களை அணித்து அக்கம் பக்கத்தில் பெருமை பேசி இருந்தால் மகிழ்ச்சி விண்ணை எட்டி இருக்குமோ ?.. இவை எல்லாம் கொடுத்து ராகவன் என் உடலில் மையம் கொண்ட பொது நான் பூரித்திருந்தால் என் வாழ்வு வளமாய் இருக்குமோ ???
 பொருள் தேடும் உலகில் நான் அருள் தேடியது பாவமோ ? உடல் தேடும் உலகில் நான் உண்மை அன்பை தேடியது பேதமையோ ?? .... நான் செய்த பாவம் என்ன ???? என்னால் முடியவில்லை ...... என் இரவுகளின் சுமை என் தலையணிகளின் ஈரம் சொல்லும்....நான் தோற்க மாட்டேன் ... வீழ மாட்டேன் .... என் மீது தவறில்லை .... ராகவா நீ என்னை ஏமாற்றி விட்டாய் .... " நான் அன்பிற்கு ஏங்கும அனாதை ஜீவன்" .... உன் கண்களில் அன்பின் ஒளியை கண்டேன் என்று கூறி ஏனடா என் பாறை மனதை பிளந்தாய் .... உன் வரையில் அன்பென்றால் உன் துணிகளை துவைபதா ? உனக்கு உணவு தயாரிப்பதா ? பரிமாறுவதா ? உன் பொருளாதார சுமையை பங்குபோடுவதா ? நீ விலை கொடுத்து வாங்கி தரும் பொருள்களுக்கு விலையாய் நான் என் உடலை தருவதா ? புரியவில்லை வீடு வாங்குவதும் வாகனம் வாங்குவதும் பொருள் சேர்ப்பதும் காதலா ? அன்பா ? .....

என் கண்களில் நீர்கோலம் நிற்கவில்லை ...... ராகவா நான் உன்னை விட்டு விலக போவதில்லை .... என் நாவால் உன்னுடன் மொழியாடுவேன் .... என் உடலால் உன்னுடன் உறவாடுவேன்…………………. ஆனால் ............... என் விழியால் உன்னுடன் காதல் பேச மாட்டேன் .... மனதால் உன்னை விட்டு பல நூறு யுகங்கள்  கடந்து நிற்பேன் ........ என் நெஞ்சில் நீ விதைத்த சூனியம் உன்னை ஒரு நாள் ஆட்கொள்ளும் .... உன்னை கொல்லும்....

என்றும் கண்ணீருடன் நான் மேகலா ...............


"இதை எழுதிய பின் என் மனமும் சற்று கனத்தே இருந்தது  இல்லை முழுவதுமாக மரத்து இருந்தது .... இதற்கு காரணம் நேற்று என் தோழியை நான் வெகு காலங்களுக்கு பிறகு சந்தித்தது ........ என் வேலை பளுவின் காரணமாக வெகு காலம் எழுத முடியவில்லை .... தவிரவும் இக்கதையை நான் முன்னமே எழுதிவிட்டிருந்தேன் ..... அனால் பகிர மனமில்லாமல்  இருந்தது இக்கதைக்கு முடிவில்லதமையால்.... நேற்று என் கணினியை திறந்தவுடன் ஒரு உந்துதல் அவளிடம் பேசியதாலோ என்னவோ .... நான் முடித்த விதம் சரியா என்றும் தெரியவில்லை ...... என் மனமும் குழம்பித்தான் போனது ....இதோ எழுதி விட்டேன் ...... இந்த குறிப்பை ஸ்ரீநியின் கருத்தை பார்த்த பின்பு எழுதவேண்டும் என்று தோன்றியது ...."

Friday, January 29, 2010

நீ

அனைவருக்கும் வணக்கம் !!!!

நான் வந்துட்டேன் !!!!
ஹ ஹ ஹ !!! " I am Back "
நான் புது மடிக்கணினி வாங்கிட்டேன் !!!

இதை கவிதைனு சொல்லமுடியலை !!!
சும்மா அப்படியே கோர்வையா வந்தது எழுதிட்டேன்
நீங்க படிச்சு பார்த்து நிறை குறைகளை சொல்லுங்களேன்

நீ

" நான் உனக்கு யார் " என்று ஒற்றைவரியில் என்னை கேட்டுவிட்டாய் நீ !!!
என்னை நானே கேட்டுகொள்கிறேன் " நீ யார் எனக்கு "
எனக்கு கிடைத்த பதில்கள் உனக்கு உணர்த்துமா நீ எனக்கு
யாரென்று ?????
என் உற்றமும் நீ
என் சுற்றமும் நீ
என் அகமும் நீ
என் புறமும் நீ

என் உறக்கமும் நீ
என் வழிப்பும் நீ
என் நிஜமும் நீ
என் நிழலும் நீ

என் யுத்தங்களும் நீ
என் படைகளும் நீ
என் சத்ருவும் நீ
என் தோல்வியும்  நீ

என் வெட்கமும் நீ
என் தாகமும் நீ
என் பிரியமும்  நீ
என் கோபமும்   நீ

என் நியாயமும்   நீ
என் அநியாயமும் நீ
என் கோரிக்கையும் நீ
என் நிராகரிப்பும் நீ

என் நினைவும் நீ
என் மறதியும் நீ
என் இஷ்டமும் நீ
என் கஷ்டமும் நீ

என் பந்தமும் நீ
என் சொந்தமும் நீ
என் ஆதியும் நீ
என் அந்தமும் நீ

என் மரணமும் நீ
என் ஜனனமும் நீ

Monday, January 4, 2010

இடுகைக்கு இடைவெளியும், புத்தாண்டு-பொங்கல் வாழ்த்தும்....என் இனிய வலையுலக நண்பர்களுக்கு...

என் அலுவலக கணினியில் இருந்து வலைப்பூக்களை பார்வையிடவும்,இடுகை பதியவும் இயலாத நிலையில் (No Access to the external sites) உங்களிடம் இருந்த தற்காலிகமாக விடைபெறுவதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

விரைவில் சொந்த கணினி வாங்க உத்தேசம் உள்ளதால் சிறு இடைவெளிக்கு பின்னர் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

இதுவரை என் இடுகைகளுக்கு கருத்தூட்டம் அளித்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலையுலக நண்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன், உங்கள் தோழி ஆழிமழை :)