Thursday, November 12, 2009

நம்மை போல் ஒருவன்


இது எனக்கு மெயில்ல வந்த ஜோக்

_____________________________________________________________

நம்மை போல் ஒருவன்

CM-->COMMON மண்

Phone ringing in commisioner office....

"Hello."

CM: "Mr. I.G.R Marrar... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க. I am sure you are aware of the power of the state of the terror cinema, “விஜய் படம் (Movie) சொல்லுவாங்க”. அவரு நடிச்ச வேட்டைக்காரன் terror cinema உங்க சிட்டில 5 எடத்துல ரிலீஸ் ஆகபோகுது. There will be many explosions in your city. bye..."

Marrar: "Hello... Hello..." (the line went dead...)

Asst: "ரொம்ப short call sir. trace பண்ண முடியல .

" Marrar: "அடுத்த கால் வரும்போது அதா trace செய்தே ஆகணும் . No more excuses." Phone ringing...

Marrar: "5 குத்து பட்டு , 4 பைட் , கொஞ்சம் செண்டிமெண்ட் சீன் . எந்த குப்பனும் சுப்பனும் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் .

" CM: "Mr.IGR.Marrar commanding ஏரியால இருகர தியேட்டர்ல பழைய விஜய் மூவி “வில்லு”, ஓடிகிட்டு இருக்கு . இன்னும் 20 mins ஷோ முடிய போகுது . முடிஞ்சா போய் படம் பாக்கறவங்கள காப்பதிகங்க .

" Marrar: "hello... hello..." the line went dead...

Marrar: "Emergenecy. எந்த தியேட்டர்ல விஜய் படம் ஓடிகிட்டு இருக்கோ அங்க செக்யூரிட்டி அதிகம் பண்ணுங்க .

" "yes, sir."

Phone ringing in reporter's desk...

CM:"Hello Ms.Natasha Rajkumar. This is going to be an important day in your life.

" Natasha: "டேய் , குரல் மாதி பேசின அடையாளம் தெரியாதுநு நெனசுடியா ?

" CM: "நான் உங்க ஆள் இல்ல . நான் சொல்றத கவனமா கேளுங்க . go to satyam theater with you VC இன்னும் 20 minutes la. This is live and this is live.

" Natasha: "hello... hello...." (line went dead.)

cops rushed to Satyam theater.. The people inside the theater watching the show were struggling to breathe and live.cop takes his walkie-talkie: "Sir, the situation is worse. we don't know how to bring them back alive." Marrar phone ringing..."hello...

" CM: "எந்த ஒரு குப்பனாலையும் சுப்பனாலையும் இப்படி ஒரு சினிமா எடுக்க முடியுமா Mr.Marrar? இப்போவாவது சீரியஸ்சா இருக்கீங்களா ?

" cop:"Sir, இன்னும் 3 minutesla மூவி முடிய போகுது . முடிஞ்சா அத்தன பேரும் செதுடுவங்கநு நெனைகிறேன் .

" CM: "எப்படி காபதனும்நு சொல்லவா ?

" Marar: "Please, tell us." CM: "Goto operator room and cut the wire to projector.

" Marar: "மெதுவா சொல்லுங்க .

" CM:"மெதுவா? Operator... room... கு போய் ... projector... wire ..... cut பன்னுங்க ...

" Marar: "goto operator room and cut the wire to projector.

" Cop: "yes sir." Line went dead...

3 PM:phone ringing...

CM: "Hello Mr. Marrar. நீங்க பாத்தது சாம்பிள் தான். ஹிஸ் ஓல்ட் மூவி . இப்போ வரபோற வேட்டைக்காரன் அத விட பயங்கரமானது . “ATM, Kuruvi, Villu” விட பயங்கரமானது Listen to me. DOn't waste time. You don't have it. நான் சொல்றத செய்ங்க .

" Marrar: "என்ன செய்ய சொல்றே ?

" CM: "Sivakasi, villu, kuruvi, ATM”, இந்த மூவி யோட எல்லா பிரிண்டையும் எடுத்துக்கிட்டு “சோழாவரம் ஏர்போர்ட்க்கு வாங்க. Send just 2 cops with that.That cop should have phone with conferencing facility. I need a huge landing space. Police விதவைகளோட எண்ணிக்கைய அதிக படுதமாடீங்கனு நம்பறேன். I want all the copies exactly by 5 PM. " The call ended.

Marrar: "Collect all the movies and put it in a safe truck and take itto Sozavaram airport as he said.

" Cop: "Sir, they are very dangerous.

" Marrar: "I know. But இந்த மூவிஸ் எல்லாம் இப்போ விட்டுட்டு அப்பறம் எடுத்தக்கலாம் ...Tamil or Telugu. begin the operation now."

"Yes sir."

4 PM:Natasha mobile ringing:CM:"Hello Ms. Natasha. Somehting is waiting for you in sozavaram airport. Be there at 5 PM"The line went dead.

5 PM: Phone ringing...CM: "Mr.Marrar, அந்த டாங்கரை அங்கே இருகர மார்க்ல விட்டுட்டு நூறு அடி தள்ளி போக சொல்லுங்க உங்க காப்சை.. Conference call ஆன் பண்ணுங்க .

"Marrar: "Do as he instruct.

" Cop1: "I'll take வில்லு movie box with me. I need it. We can give other movies.

Cop2: "You are disobeying. Put it there.

" Cop1: "No...

" Cop: "Something unusual has happened. He didn't get the movies to save.He destroyed all the three movies

" Marrar: "You mean all the four?

" Cop1: "No. I withheld வில்லு movie Box with me.

" CM: "தப்பு பண்ணிடீங்க Mr.Harrif. அதையும் நீங்க அங்க வச்சிருக்கணும். " எரிஞ்சு போய் இருக்கும் .

" Marrar:"நீ என்ன தல ரசிகனா , விஜய் படம் எல்லாம் அழிகிரியா?

" CM: "விஜய் படம் பிடிக்கலைனா தல ரசிகன்தான் இருக்கணுமா?
விக்ரம் ரசிகனா இர்ருக்க கூடாத என்ன ??? சூர்யா ரசிகன் ? கமல் ரசிகன் ? இவங்களுக்கெல்லாம் இவன் (விஜய்) படத்த பார்த்த கோவமே வரதா ? I am just a stupid common man Mr.Marrar. Harrif,
இருகர அந்த ஒரு படத்த அழிச்சுடுங்க .அத வெளியே விட்டா அதை பாத்து நிறைய பேர் படம் எடுக்க ஆரமிச்சுடுவாங்க ...

நான் ஒரு தமிழ் சினிமா ரசிகன் சொல்றேன் , please destroy it. Its in your hand now.

" Marrar: "நீ இப்படி வெறித்தனமா நடந்துக்க கரணம் என்ன ? உன் குடும்பத்துல யாராவது விஜய் படம் பாது செத்துபோய்டான்கலா ?

" CM: "நீங்க கேடீங்க அதனால சொல்றேன். 14 year old. We are adults Mr. Marrar. நீங்க police . நெறைய இந்தமாரி பாத்திருபீங்க.அந்த 14 year old எருமை “குருவி poster” சாப்பிட்டு அங்கேயே செத்து போச்சு. இதை பாத்து கண்ணீர் விட , அது என் வீட்டு எருமையா இருக்கணும்னு அவசியமில்ல. பக்கத்து வீட்டு எருமைய இருந்தா அழுக வராதா Mr.Marrar?

harrif, please அந்த படத்தோட எல்லா காபியும் கொடுத்துடுங்க. அந்த மாரி படங்கள் தமிழ்ல வந்த தடயமே இருக்க கூடாது . Please...

" Harrif Burned all the copies.

CM: "நீங்க பயப்படற மாரி வேட்டைக்காரன் மூவியை நான் release பண்ணல இந்த தீவாளிக்கு.

" Marrar: "I hope so."

Wednesday, November 11, 2009

நானும் நீயும்


சேர்ந்து சிரித்தோம் நட்பில்
ஏனோ பிரிந்து அழுகிறோம் காதலில்

சேர்ந்தே இருபினும் நம் உயிர் தனியே நின்றது அன்று
பிரிந்து நின்றாலும் நம் உயிர் உறவாடுகிறது இன்று
குடைக்குள் விழும் சாரலை போல
உன் நினைவுகள் என் நெஞ்சோடு உறவாடுகிறது

நீ இல்லை என்ற ஒற்றை சொல்லில் சரிந்த என் இதயம்
உன் ஞாபகம் என்ற ஒற்றை சொல்லில் உயிர் தங்குகிறது

நிலதோடு உறவாடும் ஒவ்வொரு மழையிலும்
எங்கோ பிரிந்த காதலின் கண்ணீர் கலந்தே இருக்கிறது

என் கண்கள் எழுதும் காதல் கவிதைகள்
என் கண்ணீரிலே கரைத்து மழையோடு சொல்லாமல் கலக்கிறது

பூமியில் பூக்கும் எல்லா காதலிலும் ஒரு பைத்தியகாரத்தனம் உள்ளது
என் காதலும் விதிவிலக்கல்ல

நீ இருந்தால்தான் தான் நான் காதலிக்க வேண்டும் என்றில்லை நீயே என் சுவசமானபின்.........

Tuesday, November 10, 2009

அமரர் கல்கியின் " அலை ஓசை "

என் தோழிக்காக அமரர் கல்கி அவர்கள் படைத்த காவியம் " அலை ஓசை "
கல்கி - அலை ஒசை: பாகம் 1 - பூகம்பம்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp205.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 2 - புயல்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp206.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 3 - 'எரிமலை'
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp208.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp210v4p1.htm







Monday, November 9, 2009

காதல் உணர்வு


நெஞ்சு நெருங்கிய போதெல்லாம்
நல்ல நட்பு பூப்பதைப்போல
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்

ஆனால்
காதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு
அதில் ஒரு பூதான் பூக்கும்
அந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்
இன்னொரு பூ பூக்கும்

காதலிக்கும் நூறுபேரும்
கைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட விரல்களைப்போல
நம்முடனேயே இருப்பார்கள் என்றில்லை

வண்ண வண்ண எழிற் கோலங்களில்
நம் உயிர் கரைந்து போனதை
அந்த வண்ணத்துப் பூச்சியிடமே
நாம் சொல்லாததைப்போல
அந்த நூறுபேரிடமும் நம் காதலைச்
சொல்லிவிட்டோம் என்றுமில்லை

வீசிச் செல்லும் வசந்தக் காற்று
சுகத்தையெல்லாம்
நம்மிடம் நிறைவாய்க் கொட்டிவிட்டு
நாம் யாரென்றும் அறியாததாய்
விலகிப்போவதைப்போல
அந்த நூறுபேரும்
நம்மைக் காதலித்தார்கள் என்றுமில்லை

ஆனால்
ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
அந்த நூறுபேரும்
நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
வாசனைப் புகையாய்
நினைவும் நினைவுமல்லாததுமான
வினோதக் காற்றில்
கரையவைத்துச் சென்றிருப்பார்கள்

ஆமாம்
காதல் ஓர் அற்புத உணர்வு
அது இதயத்தின் முழுமொத்தத்துடன்
மல்லுக்குநின்ற உயிரின் பேரவஸ்தை

ஆயினும் ஓர் உண்மையை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
அந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்
உயிரில் நங்கூரம் செழுத்தி
நகராமல் கிடப்பதைத் தவிர்க்க
எவராலும் இயலுவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிருரசிய தொண்ணூற்றொன்பது பூவிலும்
தன் வாசனையின் ஓரத்தை
அப்பி வைத்திருப்பதை
உணராமல் இருக்க முடிவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்
நிரந்தரமாய்க் களவாடிக்கொண்டு
மற்றொன்றை ஜென்மத்திற்கும் தவிக்கவிடாமல்
இருப்பதில்லை

எப்படியோ...
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்தான்
ஏனெனில்
நட்பைத் தவிக்கலாம்
காதலைத் தவிர்க்க முடியாது

புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்
..........................................................................................
இது என் நண்பனின் படைப்பு
உங்களோடு பகிர்கிறேன்

Thursday, November 5, 2009

நான் !!!! நீ !!!! நம் மழை !!!!!!!


உறக்கம் பிடிக்கா இரவுகளின் விளிம்பில்
வறண்ட பாலைவனத்தில் தனியாய் நான்
இதோ மீண்டும் நம் மழை
முத்து மணிகளாய் என் மேல் விழ
வலியில் முழுவதுமாய் நினைகிறேன்
என் நினைவுகள் உறங்கினாலும்
என் மனதில் வடுக்கள் மறையவில்லை
தொலைந்த நட்பின் காயங்கள் என்னை கொல்ல
நீயோ உன் காதலால் என் ரணமளுத்தி துடிக்க செய்தாய்
துடித்தேன், பின் நிறுத்தி வலியருத்தேன்
நாம் இருவரும் யாரென்று ??????????????

இங்கே நான் ! என்னுள் நீ ! இது நம் மழை

என்னை கடந்து சென்ற கார்மேகத்தில் உன்
-முகம் பார்த்தேன்.........
இடையில் மின்னிய மின்னல் ஒளியுள் உன்
-புன்னகை பார்த்தேன்........
சடசடவென வாரிசொரிந்து என்னை அணைத்த துளிகளில் உன்
- ஸ்பரிசம் உணர்ந்தேன்........
என் இமைகளை மூடினேன் "இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை"

Wednesday, November 4, 2009

எனக்குள் நீ ( பாகம் இரண்டு )

அதற்குமேல் அந்த அம்மா கூறிய யாவும் அவள் மூளையில் பதிந்தது அனால் அவள் ஸ்மரணை அற்று ஒரு கற்சிலை போல நின்றாள். இமைகள் கூட மூட மறுத்து அசைவற்று நின்றது. அந்த அம்மா இவளின் நிலை கண்டு சற்று பதறி இவளை உலுக்க இவுலகுக்கு வந்தாள். மௌனமே வார்த்தையாக அந்த அம்மாவை கண்ணீர் மல்க ஒருமுறை பார்த்தாள் பின் மெதுவாக திரும்பி நடந்தாள். வாசல் வரை கூட வரவில்லை பின்னால் வந்த குரல் அவளை தடுத்தது அது டேவிட் அவனின் நண்பன் .. இவள் மெல்ல நிமிர்த்து பார்த்தாள். அபோது டேவிட் " என்னமா உன் சைக்கிள் கூட மறந்து போற ? பார்த்து மா நான் உன் வீடு வரை வரட்டுமா " இந்த கேள்விக்கு பதில் சொல்ல கூட தெரியாமல் மௌனமாய் தன் சைக்கிளை தள்ளிய படி வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்ட கூட தோன்றாமல் உருட்டிய படியே நடந்தாள். சிறிது தூரத்தில் மீண்டும் டேவிடின் குரல் அனால் இந்த முறை இவள் நிற்க வில்லை ஏனோ ஒன்றும் பேசாமல் நடந்தாள் எங்கே போவது என்று கூட தெரியாமல் வர்ஷினியிடம் சென்றாள்.

வர்ஷினி இவருக்கும் பொதுவான தோழி. இவளை பார்த்த வர்ஷி ஓடி வந்து கட்டி பிடித்து கதறினாள். அதற்கு மேல் இவளும் கதறிவிட்டாள். வர்ஷியின் அம்மா இவர்களை தனித்து விட்டு சென்றுவிட்டார்கள்.

வர்ஷி மெல்ல இவளை தேற்ற எத்தனித்தாள் அனால் அவள் முயற்சி பலிக்கவில்லை அந்த சமயம் டேவிடும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரின் பேச்சிலும் அவள் மாறவில்லை. அபோதுதான் அது நடந்தது அச்சு ( ஆம் அது தான் அவன் பெயர் ) அவளை காதலித்தது அவளுக்கு தெரியவந்தது. டேவிட் பேச்சோடு பேச்சாக அதை சொல்லிவிட்டான்.

இவள் அதிர்ந்து டேவிடை பார்த்தபோது தான் அது அவனுக்கே உறைத்தது. அனால் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் மறைக்க முடியாமல் டேவிட் இத்துணை நாள் அச்சு தன் மனதிற்குள் பூட்டிய அவனுடைய காதலை நித்திலாவிடம் ( இது தான் அவள் பெயர் ) கொட்டிவிட்டன். விதி வலியது . இதை நம்ப மறுத்த நித்திலாவிடம் அச்சுவின் டயரியை வர்ஷி கொடுத்தாள். நித்திலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை கோபம் அழுகை எல்லாம் ஒருசேர அசைவற்று நின்றாள். அச்சு இன்று இல்லை என்பதை இவளால் இன்னும் நம்பமுடியவில்லை அதற்கு மேல் அவனின் காதல்.

இத்தனை நாள் எத்தனை பகிர்வுகள் நித்திலாவின் இன்பம் துன்பம் கோவம் என எல்லாவற்றிலும் பாதியாயை நின்ற அச்சு எங்கே இத்துணை உருதுனைகும் பின்னல் நின்றது காதல்தானா.... இவை காதலுக்காக என்றால் என் நட்பு எங்கே.... (தொடரும்........)

எனக்குள் நீ

அவள் மெதுவாக கண் திறந்து பார்த்தாள், மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். உடல் வலித்தது மனம் ரணமாக இருந்தது.. இயலாமை கோவம் இரண்டும் சேர்ந்து அவளை பந்தாடியது. மெல்ல எழுந்து நடந்து வாஷ் பேசின் அருகே வந்தாள். ஒருவித ஒவ்வாமை வயிற்றை புரட்டியது. கண்ணாடியில் முகம் பார்த்தாள் உதடோரம் ரதம் பிசுபிசுத்தது. முகம் கன்றி இருந்தது. கண்கள் சிவந்து ஜீவன் இன்றி கெஞ்சின. அவள் முகத்தை பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. நேற்று நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன மீண்டும் ஒரு வித ஒவ்வாமை வாந்தி எடுத்தாள். நீரை வாரி முகத்தில் அறைந்தாள். மெல்ல நிமிர்ந்து கண்ணாடியை பார்த்து அதிர்ந்தாள் அங்கே அவன் பிம்பம். தலையை ஒரு பக்கமாக சாய்த்து அரிசி பற்கள் தெரிய மிதமான புன்னகை சிந்தி கண்களை சிமிட்டும் அவன் முகம். இவள் கண்களில் மீண்டும் நீர்கோலம். மெல்ல இவள் நினைவுகள் பினோக்கி சுழன்றது. நினைவுகளில் மெல்ல கரைந்தாள். அவன் இவள் தோழன் அனால் இவள் அவன் காதலி உயிரில் கலந்து உணர்வில் சேர்த்து நிதம் கொண்டாடும் காதலி . அவன் தொண்டைகுழி வரை எட்டி பார்த்த காதல் வார்த்தைகளை வாய் வரை கூட வரவிடாமல் தடுத்து விழுங்கி மனதிற்குள் தன் காதலை சாமாதி ஆகிவிடுவான். அவளை பார்ப்பதே போதும் என்ற உணர்வு அவனுக்கு. அவளோ இவன் தோழமையிலே கருப்பை குழந்தை போல பாதுகாப்பை உணர்ந்தாள். அவன் மேல் அளவு கடந்த அன்பு பாசம் அனால் அது காதலா என்றால் இல்லை என்பது தான் இவள் பதில். அவனுடன் பேசாமல் இவளால் இருக்க முடியாது அவனுடன் சண்டை பிடிக்காமல் இருக்க முடியாது. இது தெரிந்ததுனாலோ என்னமோ அவன் காதலை தன் மனதிற்குள்ள பூடிகொண்டான். இவர்களின் இந்த கண்ணாமூச்சி விளையாடும் ஒரு முடிவிற்கு வந்தது. இல்லை முடிவு அவனுக்கு வந்துவிட்டது. ஆமாம் ஆமாம் அவன் போயேவிட்டான் அந்த பேரிடி இவள் தலையில் ஒருநாள் இறங்கியது. ஊருக்கு போய்வந்து ஆர்வத்துடன் அவனை காண ஓடி சென்று பூட்டி கிடந்த அவன் வீட்டை பார்த்து ஏமாந்து பக்கத்து வீட்டில் விசாரித்த பொது தான் இந்த இடி இவள் தலையில் இறங்கியது " இப்போதான் வரியாமா , எங்க கண்ணு போயிருந்த நீ, அந்த அம்மா உன் பேரை சொல்லித்தான் புலம்பினாங்க.” இவளுக்கு ஒன்றும் விளங்காமல் பரபரத்து போனாள். கால்களுகடியில் பூமி நழுவுவது போல இருந்தது. அந்த அம்மா கூறிய வார்த்தைகளை இவள் காதுகள் ஏற்க மறுத்தன “அந்த புள்ள 10 நாலு முன்னாடி ஆக்சிடென்ட்லே செத்துபோய்.....” வாக்கியங்களை அந்த அம்மா முடிக்கும் முன்னே அவள் நிலைகுலைந்து போனாள். ஓங்கி பெருங்குரல் எடுத்து அழக்கூட திராணி இன்றி தவித்தாள் (தொடரும்................)