Tuesday, December 15, 2009

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு



மீண்டும் ஒரு திரைப்பாடல் அர்த்தமுள்ள ஆழமான பாடல் !!! அருமையான வரிகள் " சமரசம் உலாவும் இடமே " இந்த பூமியில் வாழும் போது எத்தனை செருக்குடன் இருந்தாலும் நாம் அனைவரும் சமம் என்பதை எடுத்துறைகிறது இந்த பாட்டு........... இந்த பாட்டை நான் எதனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணுவது கடினம் தான் ..... நான் மிகவும் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று ..... உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்

திரைப்படம் : ரம்பையின் காதல்
திரை இசை : T.R. பாபா அவர்கள்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பாடல் ஆசிரியர் : மருதகாசி அவர்கள்

பாடல்

சமரசம்ம்ம்.....
உலாவும் இடமே ....
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோறேன்றும்
தாழ்ந்தவர் தீயோறேன்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே
அரசனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே

சேவை செய் தியாகி
சிங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை
நாடிடும் யோகி
எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே

http://www.hummaa.com/music/album/Rambaiyin%20Kaathal/14081
இங்கே சொடுக்கி பாட்டை கேட்கலாம்

14 comments:

  1. //இந்த பூமியில் வாழும் போது எத்தனை செருக்குடன் இருந்தாலும் நாம் அனைவரும் சமம் என்பதை எடுத்துறைகிறது இந்த பாட்டு.//

    பாட்டை விட உன்னோட கருத்தும்,எழுத்தும் நல்லா இருக்கு கல்ஸ்.

    அடுத்த இடுகை உன்னோட கவிதையாக இருக்க வேண்டும்.ரொம்ப நாளாச்சு உன்னோட கவிதை படித்து..(போடுவல்ல!)

    -கதிர்

    ReplyDelete
  2. //ஆண்டி எங்கே
    அரசனும் எங்கே
    அறிஞன் எங்கே
    அசடனும் எங்கே
    ஆவி போனபின் கூடுவார் இங்கே
    ஆகையினால் இது தான்
    நம் வாழ்வில் காண
    சமரசம் உலாவும் இடமே//

    பாட்டு அருமையாதான் இருக்கு... படிக்க மற்றும் கேக்க!

    ReplyDelete
  3. இதப்படிக்கறப்ப சுத்தி புகையா சுடுகாட்டு எஃபக்டே வந்துடுச்சி போங்க..

    ReplyDelete
  4. //சேவை செய் தியாகி
    சிங்கார போகி
    ஈசன் பொற்பாதம் தன்னை
    நாடிடும் யோகி
    எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே
    உண்மையிலே இது தான்
    நம் வாழ்வில் காண
    சமரசம் உலாவும் இடமே//

    Thanks for otraikuyil!

    -Keyaar

    ReplyDelete
  5. அருமையான பாடலை ரசிக்க தந்ததற்கு நன்றி .

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  6. நல்ல ரசனை உங்களுக்கு. இப்படியெல்லாம் பாட்டு வந்ததது தெரியாது. எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. ரொம்ப பழைய பாடல்களை விரும்பி கேப்பீங்க போல...

    ReplyDelete
  8. நன்றி கதிர் !!!

    ReplyDelete
  9. தங்கள் கருத்துக்கும் ரசனைக்கும் என் நன்றிகள் கலையரசன்

    ReplyDelete
  10. அண்ணாமலையான் நன்றிகள் !!! இந்த பாட்டு பயமுடுத்தும் படியாவா இருக்கு !!!! எலோரும் கடைசியிலீ அங்கே தானே போகணும் !!!

    ReplyDelete
  11. -Keyaar தங்கள் ரசனைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  12. மீன்துள்ளி செந்தில் தங்கள் கருத்துக்கும் ரசனைக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  13. சித்ரா தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  14. ஆமாம் வசந்த் எனக்கு பழைய பாடல் என்றாலே ஒரு வித ஈர்ப்பு தான்.... ரொம்ப விரும்பி கேட்பேன்... எனோட இபோது முழுவதும் பழைய பாடல்கள் தான்... தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் என் நன்றிகள்

    ReplyDelete